தமிழக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் உடன் பிறந்த தம்பி ஓ.பாலமுருகன் உடல் நலம் சரியில்லாமல் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு பெரியகுளம் வீட்டிற்கு  கொண்டுவரப்பட்டு இன்று அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்  சென்னையில் இருந்து தற்பொழுது கிளம்பி பெரியகுளம் சென்று கொண்டிருக்கிறார்.


நீண்ட நாட்களாக கல்லீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவர், ஏற்கனவே ராணுவ ஹெலிகாப்டரில் சென்னை அழைத்து வரப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு பிழைத்தார். இருப்பினும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருந்ததால் திருவனந்தபுரத்தில் சிகிச்சையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.