இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் வடமாநிலத்தவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 


தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே வடமாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுக்காப்பு இல்லை என சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்கள் மூலம் தகவல் பரவி வந்தது. அதற்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் ஆகியோர் மறுப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது, “ இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் வடமாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். சிலர் தமிழ்நாடு வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான இடம் போல் வதந்திகளைப் பரப்புகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.