தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் உயிரிழந்தவர்கள் வழக்குத் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சி.பி.சி.ஐ.டி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக 17 வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். உயிரிழந்தவர்கள் விளையாடிய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு சி.பி.சி.ஐ.டி. நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டிரீம் 11, ரம்மி, பப்ஜி உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


ஆன்லைன் சூதாட்டம்:


நாடு முழுவதும் ஏராளமான மக்கள் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடி வருகின்றனர். பலர் இதற்கு தீவிரமாக அடிமையாகிவிட்டனர். இதில் பணம் சம்பாதிக்கும் மக்களைவிட பணத்தை இழந்து தவிக்கும் மக்களே அதிகமாக உள்ளனர். ஆன்லை சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழப்பவர்கள் மன ரீதியில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் மனமுடைந்து உயிரை மாய்த்துகொள்ளும் நிலமையும் ஏற்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.


இதனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. தமிழ்நாடு சட்டமன்றத்திலும் ஆன்லைன் சூதாட்ட தடைக்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு இன்னும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான அவசரச் சட்டம் காலாவதியானது.இதனிடையே, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்ததாக பதிவான 17 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். 


அதன் அடிப்படையில், இவ்வழக்குகளை விசாரிக்க தொடங்கியுள்ளது, சி.பி.சி.ஐ.டி.. ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்சர், ஜங்கிலி ரம்மி, பப்கி ஆகிய ஆறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் சூதாட்டத்தினால் உயிரிழந்தவர்களின் தகவல்களை அளிக்குபடி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


ஆன்லைன் சூதாட்டத் தடை


71 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், ’’ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் அதனை விளையாடுபவர்களின் திறன்கள் எந்த விதத்திலும் அதிகரிப்பதில்லை என்றும் மாறாக அவர்களுடைய திறன்களை குறைக்கும் வேலைகளையே ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகள் செய்கின்றன. விளையாடும் நபர்களை ஆன்லைன் விளையாட்டுகள் அடிமையாக்குன்றன என்றும் அதோடு அவர்களை கடனாளியாக்கும் திட்டத்துடனே அவை வடிவமைக்கப்பட்டுள்ளது.