அரசுப் பள்ளியில் இவ்வளவு மரங்களா என எங்கள் பள்ளியைப் பார்த்துப் பிரமிச்சுப்போறாங்க. மைதானமாக இருந்த இடத்தில், மாணவர்களின் பங்களிப்போடு நூற்றுக்கணக்கான மரங்களை வளர்த்து சோலையாக மாற்றியிருக்கிறோம்" என உற்சாகமாகப் பேசுகிறார், தலைமையாசிரியர் இப்ராஹிம். அடுத்த தலைமுறைக்கு எதையாவது நம் விட்டுச்செல்ல வேண்டும் என்று  எண்ணம்  இருந்தது நான் எழுதிய "மயிலக்கா" புத்தகத்தையும் நான் வளர்த்த மரத்தையும் மாணவர்களுக்காக விட்டுச் செல்லவே கடமைப்பட்டிருக்கிறேன் மனம் திறக்கிறார் ஆசிரியர்.

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இராமனூத்து கிராமத்தில் அமைந்துள்ள அந்த அரசு துவக்க பள்ளி. அழகும் ஆரோக்கியமும் நிறைந்த சூழ்நிலையில் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்க, பள்ளியின் மாற்றத்துக்கான விதையிலிருந்து ஆரம்பிக்கிறார் தலைமையாசிரியர் இப்ராஹிம்,நான் பள்ளியில் பணிபுரிய ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆகின்றன. மரம் வளர்க்க வேண்டும்; சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் சிறு வயது முதலே என்னிடம் இருக்கிறது. தலைமை ஆசிரியராகவும் இருப்பதால், புவி வெப்பமயமாதல் பிரச்னையைத் தடுக்கும் பொறுப்பு எனக்கு இருப்பதாக உணர்கிறேன். பேருக்காக ஆயிரம் மரங்களை நட்டு அனாதையாக்குவதைவிட, ஒரு மரம் என்றாலும், குழந்தையைப்போல பராமரித்து வளர்க்க வேண்டும் என நினைப்பேன். எனவே, என் மாணவர்களையும் இணைத்துக்கொள்ள முடிவுசெய்தேன். இதுபோன்ற சமூகச் செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் மாணவர்கள் படிப்புடன் பண்புள்ள மனிதர்களாகவும் உயர்வார்கள் என உறுதியாக நம்புகிறேன் .




இதற்கு முன்பு எனது வீட்டில் முழுக்க மரக்கன்றுகளை நட்டுவைத்தோம்,ஆனால், அங்கே ஏற்பட்ட வறட்சி காரணமாகவும் கால்நடை மேய்ச்சல் பிரச்னையாலும் மரக்கன்றுகளைப் பெரிய அளவில் பராமரிக்க முடியாமல்போனது. அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நான் பள்ளிக்கு போகும் நேரம் அதிகம் எனது வீடும் பள்ளிக்கு மான இடைவெளி 40' கிலோமீட்டர்  தொலைவில் உள்ளது.தினமும் 40 கிலோ மீட்டர் அதிகமாக பயணிக்கிறேன் அதனால் அதிகபட்ச நேரம் பள்ளியில் இருப்பதால் அதிக மரங்கள் இருந்தால் மாணவர்கள் விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வந்து மரத்தடி நிழலில் படிக்கலாம் என நினைத்தேன். மாணவர்களுடன் செயலில் இறங்கினேன். ஊர் பொதுமக்கள், நண்பர்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது. இது வறட்சியான பகுதி என்பதால், மரங்களுக்கு தண்ணீருக்காக ஓர் சிறிய தண்ணீர் தொட்டியை அமைத்தோம். மிகவும் வறட்சியான காலங்களில் வெளியிலிருந்தும் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றி பராமரிக்கிறோம்.




ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரத்தைப் பராமரிக்கும் பொறுப்பைக் கொடுத்தேன். மாணவர்கள் உற்சாகத்துடன் தங்கள் மரத்தை குழந்தைப்போல நினைத்து அன்போடு வளர்க்க ஆரம்பித்தனர். விடுமுறை நாளிலும் தங்கள் மரத்தைத் தேடிவந்து தண்ணீர் ஊற்றுவார்கள்.தற்போது 200-க்கும் அதிகமான மரங்கள் கம்பீரமாக வளர்ந்து நிற்கின்றன. அதைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது, பல மாணவர்கள் தங்கள் வீடுகளிலும் மரங்களை வளர்க்கிறார்கள். பள்ளிப் படிப்பிற்கு வரும் ஒவ்வொரு மாணவரும் பள்ளிக்குப் பரிசாக ஒரு மரக்கன்றை முன்வந்து தருகிறார்கள். ஒரு நல்ல செயலை ஆரம்பித்துவைத்தால், மாணவர்களே அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்வார்கள் என்பதற்கு இதுவே உதாரணம்" என நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் தலைமை ஆசிரியர் இப்ராஹிம்