தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது.  பெங்களூருக்கு 7 பேரின் மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் ஒருவருக்கு ஒமிக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து தெரிவித்த நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த 47 வயதான நபருக்கு தற்போது ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவருடன் பயணித்த உறவினர்கள் 7 பேருக்கும் பாதிப்பு இருக்கலாம் அச்சம் இருக்கிறது. விரைவில் ஆய்வு முடிவுகள் வெளியானதும் விவரம் தெரிவிக்கப்படும் என்றார் 


பாதிக்கப்பட்ட நபர் லேசான தொற்றுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்


Tamil Nadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் 640 பேருக்கு கொரோனா தொற்று; 11 பேர் உயிரிழப்பு!




இந்தியாவில் இதுவரை 69 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.


சமத்துவமா? சங்கடமா? இருபாலருக்கும் ஒரே சீருடை: ஆசிரியர்கள், மாணவிகள் சொல்வது என்ன?


இதற்கிடையே இதுவரை கண்டிராத வேகத்தில் ஒமிக்ரான் பரவி வருவதாகவும் இதுவரை உலக அளவில் 77 நாடுகளில் பரவியுள்ளது எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், “77 நாடுகளில் இப்போது ஒமிக்ரான் பதிவாகியுள்ளன. உண்மை என்னவென்றால், ஒமிக்ரான் இன்னும் கண்டறியப்படாவிட்டாலும் கூட, பெரும்பாலான நாடுகளில் இருக்கலாம். ஓமிக்ரான் முந்தைய மாறுபாடுகளுடன் நாம் இதுவரை காணாத வேகத்தில் பரவுகிறது. மக்கள் ஓமிக்ரானை லேசானது என்று நிராகரிக்கின்றனர். இது எங்களுக்கு கவலையை தருகிறது. நிச்சயமாக, இந்த வைரஸை குறைத்து மதிப்பிடுகிறோம் என்பதை நாங்கள் இப்போது கற்றுக்கொண்டோம்.





தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட 'ஒமிக்ரான்' எனும் புதிய வகை கொரோனா தற்போது உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. விமான நிலையங்களில் வெளிநாட்டுப் பயணிகளுக்குக் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில், வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் தற்போது ஜனவரி மாதம்வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண