தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பரிசோதனையை நிறுத்திவிட்டதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில் ஒமிக்ரான் தொற்று அதிகரிப்பால் மூன்றாவது அலை தொடங்கிவிட்டதை தொடர்ந்து, அதனை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு மேற்கொண்டு வருகிறது.


இந்த நிலையில், கொரோனா தொற்று தொடர்பாக சென்னையில் இன்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், “தமிழ்நாட்டில் ஒமிக்ரான் பரிசோதனை நிறுத்தப்பட்டு விட்டது. கொரோனா உறுதி செய்யப்படுவோரில் 85 சதவீதம் பேருக்கு ஒமிக்ரானும், 15 சதவீதம் பேருக்கு டெல்டாதான் வருகிறது. 100 பேருக்கு கொரோனா உறுதியானால் 85 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்புதான் இருக்கிறது. ஒமிக்ரான் பரிசோதனையின் முடிவுகள் வருவதற்குள் தொற்று பாதித்தோர் குணமடைந்து விடுகின்றனர். இதனால், மரபணு சோதனை கைவிடப்பட்டது. டெல்டாவும் ஒமிக்ரானும் இணைந்து இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு மிதமான பாதிப்பு இருப்பதால் வீட்டுத்தனிமையில் உள்ளனர்” என்று கூறினார்.


 






மேலும், மெகா கொரோனா தடுப்பூசி முகாமை இந்த வாரத்துக்கு பதில் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்க ஆலோசனை செய்து வருவதாகவும், அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் விடுமுறை என்பதால் அடுத்தவாரம் முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.


மேலும், இப்போதைக்கு முழு ஊரடங்கு தேவையில்லை என்றும், பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்று முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளதாக கூறிய அமைச்சர், தற்போதுள்ள ஊரடங்கே போதுமானது என்றும் கூறினார். 


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,68,063 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தொற்றால் 277 பேர் உயிரிழந்த நிலையில், 69,959 பேர் பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒமிக்ரானால் மொத்தம் 4,461 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண