பெங்களூருவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் - சோதிக்கப்படாமல் நுழையும் வாகனங்களால் ஓசூர் மக்கள் அச்சம்

’’பெங்களூருவில் ஒமிக்ரான் தொற்று பாதித்த நபர் தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி பகுதிக்கு அருகில் வசித்து வந்தநபர் என்பது தெரியவந்துள்ளது’’

Continues below advertisement

கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொருத்தவரை தமிழகம் கர்நாடகா ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கும் பகுதியாக உள்ளது, மேலும் மாவட்டத்தில் அண்டை மாநிலங்களை இணைக்கும் வகையில் 13 சோதனை சாவடிகள் அமைந்துள்ளது, மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 800 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து நாளொன்றுக்கு தொற்று பாதிப்பு பத்துக்கு கீழ் குறைந்துள்ளது. மேலும் மாவட்டத்தில் 15 லட்சத்து 2 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் இவர்களில் 10 லட்சத்து 86 ஆயிரத்து 500 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். மேலும் 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். மாவட்டத்தில் நோய்தொற்று கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களான வழிபாட்டுத்தலங்கள், திரையரங்கங்கள் உள்பட பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி நேற்று முன்தினம் உத்தரவுப் பிறப்பித்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு நபர்களுக்கு ஒமைக்கான் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Continues below advertisement

அவருடன் தொடர்பில் இருந்த ஐந்து பேருக்கு கொரோனா தோற்று கண்டறியப்பட்டுள்ளது இதில் 3 பேரும் மருத்துவர்கள் ஆவர்கள். மேலும் இரு குழந்தைகள் பாதிக்கப்பட்டு அந்த ஐந்து நபர்களின் மாதிரிகளை  பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் பரிசோதனையின் முடிவு வந்த பிறகே பெங்களூருவில் ஒமைக்கான் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிய வரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் கர்நாடக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண்காணிப்பில் இருந்தவர்களை தனிமைபடுத்தி அவர்களை தொடர்ந்து கண்டறியும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரம் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர் இது மட்டுமின்றி பெங்களூர் சிவாஜி நகரில் உள்ள போரிங் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை மையம் ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பெங்களூரில் 46 வயது மதிக்கத்தக்க நபர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் தமிழக - கர்நாடக மாநில எல்லையான ஜூஜூவாடி பகுதியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொம்மசந்திரா பகுதியை சேர்ந்தவர். இப்பகுதியில் தொழில் பேட்டைகள் நிறைந்து உள்ளதால் ஓசூரில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சென்று வருவது வழக்கம் இதனால் மாவட்டத்தில் நோய்தொற்று பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகமும், ஓசூர் மாநகராட்சியும் மாநில எல்லையில் எந்த ஒரு தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது இந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியும் ஒரு ஆதங்கம் ஏற்படுத்தி உள்ளது எனவே இனியாவது மாவட்ட நிர்வாகம் விழித்துக்கொண்டு நிலையில் மாநில எல்லையில் தடுப்புகள் அமைத்து வாகன தணிக்கை ஈடுபடவேண்டும் மேலும் சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டும் அண்டை மாநிலங்களில் வருபவர்களை வெப்பநிலை பரிசோதித்து உறுதி செய்ய வேண்டும் என்பது மாவட்டத்தின் மக்களின் எதிர்பார்ப்பாகவும் கோரிக்கையாக உள்ளது.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola