சென்னை தாம்பரத்தில் கஞ்சா, போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைது 2000 வலி நிவாரணி மாத்திரைகள், 1.5 கிலோ கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்தனர்.


கஞ்சா போதை மாத்திரை புழக்கம்


சென்னை ( Chennai News ) : சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் போதை மாத்திரைகளின் புழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவப்பொழுது பெரிய அளவில் போதை மாத்திரைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்களை சிறையில் அடைத்தும் வருகின்றனர்.

 

மாத்திரைகளை வாங்க ஆந்திரா சென்ற நபர்

 

அந்தவகையில் சென்னை  குரோம்பேட்டை அடுத்த நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (23).இவர் மீது ஏற்கனவே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் கைதானவர். தற்போது மீண்டும் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக சங்கர் நகர் ஆய்வாளர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பாஸ்கரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, அவரது நண்பரான யோவான் (32), என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கஞ்சா, மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்க ஆந்திரா சென்றுள்ளது தெரியவந்தது. 

 

நாசுக்காக பாலோ செய்த போலீஸ்

 

அதனடிப்படையில் அவரது செல்போன் சிக்னலை வைத்து அவரை போலீசார் கண்காணித்தனர். போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையம் செல்வதற்குள் யோவான் ரயில் நிலையத்திலிருந்து இறங்கி போரூர் ஐயப்பந்தாங்கல் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற போலீசார் அவர் வீட்டிற்கு சென்றதும் அங்கு சோதனையிட்டனர். சோதனையில் வீட்டில் 2000 வலி நிவாரணி மாத்திரைகள், சிரஞ்சி, 1.5 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது அதனை பறிமுதல் செய்த போலீசார் யோவானை கைது செய்தனர். 

 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு

 

மருத்துவரின் முறையான பரிந்துரை சீட்டு இல்லாமல் ஆந்திராவில் இருந்து வலி நிவாரணி மாத்திரை, கஞ்சாவை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்து வந்த இருவர் மீதும் வழக்குப்பதிவு, செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

 

கொரியர் மூலம் மாத்திரைகள் வரவழைக்கப்பட்டதா ? 

 

பெரும்பாலும் இந்த மாத்திரைகளை கொரியர் மூலம் அவர் வர வைத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு சில முக்கிய ஆவணங்களையும் காவல்துறையினர் கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

 



ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண