ஒப்பந்த செவிலியர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை முடிவடைந்ததையடுத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது,
பேச்சுவார்த்தை தோல்வி:
மருத்துவத்துறை இயக்குநரகம் உள்ளிட்ட இடங்களில் ஏற்படும் காலி பணியிடங்களில் ஒப்பந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், போராட்டம் தொடரும் என கொரோனா கால ஒப்பந்த செவிலியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலமாகவும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர்.
மாதம் ரூ.14 ஆயிரம் ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட அவர்களுக்கு, ஒவ்வொரு 6 மாத இடைவெளியில் பணி நீட்டிப்பு செய்யும் ஆணை வழங்கப்பட்டது. இந்நிலையில், எம்ஆர்பி மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,472 செவிலியர்களுக்கு சில தினங்களுக்கு முன்பு பணி நீட்டிப்பு ஒப்பந்தம் முடிந்த நிலையில், மீண்டும் நீட்டிப்பு செய்யப்படவில்லை. அவர்களை பணியில் இருந்து விடுவிப்பதற்கான அரசாணை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்த அரசாணையை எதிர்த்து தமிழகம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து செவிலியர்கள் கூறுகையில், "கொரோனா காலத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களுக்கான சேவையில் ஈடுபட்டோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் நேரடியாக பணி வழங்கவில்லை. மருத்துவப் தேர்வாணையம் தேர்வு எழுதி 60% சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டோம். ஆறு மாத காலம் பணிக்கு நியமிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டும். திடீரென கடந்த 31 ஆம் தேதி உங்களுக்கான தற்காலிக பணி நிறைவு பெற்றுவிட்டது நாளை முதல் நீங்கள் யாரும் பணிக்கு வர வேண்டாம் என கூறினர்.
இந்நிலையில் இன்று செவிலியர்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றும் உடன்பாடும் எட்டபடவில்லை.
அதற்காக அவர்கள் சொன்ன காரணம், என்எச்எம் நிதி ஆதாரம் இல்லாமல் நேரடியாக தமிழக அரசின் நிதி ஆதாரத்தின் கீழ் எங்களுக்கு பணி வழங்கப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். கடைசியாக இட ஒதுக்கீடு பின்பற்றாத தற்காலிக மருத்துவர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்பட்டது போல் எங்களுக்கும் ஒப்பந்த பணி வழங்கிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்து, மாவட்ட ஆட்சி தலைவர்கள் மூலம் மாவட்ட சுகாதார சங்கம் மூலமும் அந்த மாவட்டங்களில் காலி பணியிடங்கள் நிரப்பும்போது, நீங்கள் விண்ணப்பியுங்கள் உங்கள் அத்தனை பேருக்கும் பணி உத்தரவாதம் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறோம். காலி பணியிடங்களில்
என் எச் எம். நிதி ஆதாரம் இல்லாமல், தமிழ்நாடு அரசின் நிதி ஆதாரத்தின் கீழ் பணி வழங்கப்பட வேண்டும், இட ஒதுக்கீடு பின்பற்றாத தற்காலிக் மருத்துவர்களுக்கு நிரந்தரமான பணி வழங்கியது போல, எங்களுக்கும் ஒப்பந்த பணி வழங்கிட வேண்டும் என்று செவிலியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதற்கு அரசு தரப்பில், மாவட்ட சுகாதார சங்கம் மூலம், மாவட்டங்களில் காலி பணியிடங்கள் நிரப்பும்போது, விண்ணப்பியுங்கள் என்றும் பணி வழங்கப்படும் என்றும் மருத்துவத்துறை இயக்குநரகம் உள்ளிட்ட இடங்களில் ஏற்படும் காலி பணியிடங்களில் ஒப்பந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இதை ஏற்க மறுத்த செவிலியர்கள், போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.