கரூரில் மாணவர் ஒருவர் ஆற்றில் மலம் கழிக்க கூடாது என வலியுறுத்தி ஆற்றங்கரையோர  பொதுமக்களிடம் நோட்டீஸ்களை அளித்தார்.


உலக தண்ணீர் தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கரூர் ராமேஸ்வரப்பட்டியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் விஷ்வக் நித்தின் ஆற்றில் மலம்  கழிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்த செயல் விளக்க பிரச்சாரத்தை நடத்தினார். 


 




 


பள்ளி மாணவன் விஷ்வா கிரித்திக் ஆற்றில் மலம்  கழிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்தும் அதனால் ஏற்படும் நோய்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துக் கூறினார்.


அது குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கினார்.


 




 


தொடர்ந்து அவர் கரூரில்  உள்ள அமராவதி ஆற்றங்கரையோரம் மற்றும் வாங்கல், மோகனூர், ஆகிய  பகுதியில் காவிரி ஆற்றங்கரை வசிக்கும் பொது மக்களுக்கு நீர் நிலைகளில் இயற்கை உபாதையை கழிப்பதால் ஏற்படும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.


குடும்பத்  தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவதாக அறிவித்ததை கொண்டாடும் விதமாக கரூரில் குலவை சத்தமிட்டு மகிழ்ச்சியை கொண்டாடிய பெண்கள்.*


திமுக தேர்தல் வாக்குறுதியின் படி ரேஷன் கார்டு வைத்துள்ள இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட்டில் உறுதி செய்யப்பட்டதை, தொடர்ந்து கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூர் பகுதியில், 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் வசுமதி பிரபு பெண்களுடன் ஊர்வலமாக சென்று ஒவ்வொரு வீடுகள், கடைகளில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும்  இனிப்புகள் கொடுத்து கொண்டாடினார்.  அப்போது பெண்கள் வட்ட வடிவமாக கூடி நின்று குலவை சத்தமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.