ஆன்லைன் மூலம் ரூ.6 3/4  லட்சம் மோசடி ஈடுபட்ட பெங்களூருவை சேர்ந்த 2 வாலிபர்களை கரூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.


 




கரூரை சேர்ந்த ஸ்டாலின் என்பவருக்கு ஒரு எண்ணில் இருந்து ஒருவர் போன் செய்து, தனது பெயர் ஸ்ரீரங்கராவ் எனவும், கர்நாடகாவில் இருந்து பேசுவதாகவும் தான் யு.கே.வில் இயங்கி வரும் ஐஸ் போர்ட்ஸ் டிரேடர் என்ற டிரேடிங் கம்பெனியில் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தங்களுடன் சேர்ந்து ஐஸ்போர்ட்ஸ் டிரேடர்.காம் என்ற வெப்சைட் மூலம் மடா டிரேடு 5 என்று அப்ளிகேஷனில் டிரேடிங் செய்தால் எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி நம்ப வைத்துள்ளார்.


மேலும், பணத்தை வைத்து உண்மையாக டிரேடிங் செய்வது போன்ற தோற்றத்தினை மடா டிரேடு 5 என்ற அப்ளிகேஷனில் காண்பித்துள்ளார். ஆனால் அவர், தொடர்ந்து நஷ்டம் அடைந்து வந்துள்ளார். இதனால் மீதமுள்ள தொகையாவது எடுக்க ஸ்டாலின் முயற்சி செய்துள்ளார். ஆனால் அதற்கும் பல சேவை கட்டணம், வரித்தொகை என பல காரணங்களை கூறி ரூ.6 லட்சத்து 79  ஆயிரத்தை ஆன்லைன் மூலம் மோசடியாக பெற்று ஏமாற்றியது தெரியவந்துள்ளது.


 




இதுதொடர்பாக ஸ்டாலின் கரூர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனை அடுத்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கர்நாடக மாநிலத்தினை சேர்ந்த தனியார் கம்பெனியின் அக்கவுண்டிற்கு பணம் சென்றுள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவுபடி கரூர் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவேணி தலைமையில் போலீசார் கர்நாடக மாநிலத்துக்குச் சென்று இந்த தனியார் கம்பெனியின் இயக்குனர்களான பிரவீன் குமார் மற்றும் நவீன் குமார் ஆகியோரின் செல்போன் எண் இருப்பிடத்தை வைத்து கே.ஆர்.புரம், பெங்களூரு என்ற முகவரிக்கு சென்று விசாரித்தனர்.


இதில் குற்றசம்பவத்தில் ஈடுபட்ட பிரவீன்குமார் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசார ணையில் பிரவீன்குமார் நண்பர் விஷால்பவார் என்பவர் கொடுத்தயோசனையின்படி இவர்கள் வெளிநாட்டு கம்பெனியில் வேலைபார்க்கும் போரிஸ் என்பவருடன் சேர்ந்து மடா டிரேடு 5 என்ற அப்ளிகேஷன் மூலம் பொதுமக்களை கிரிப்டோ கரன்சி மூலம் முதலீடு செய்யவைத்து அதன் மூலம் டிரேடிங்செய்து அதில் லாபம் சம்பாதிப்பது போன்ற ஒரு திட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


2 வாலிபர்கள் கைது


 


 




 


இதில் வெளிநாட்டு கம்பெனியின் சேல்ஸ் டீம் பொது மக்களிடம் வாட்ஸ்-அப் மூலம் பேசி இவர்களின் வங்கி கணக்கிற்கு பணத்தை போட செய்வார்கள் எனவும், வாடிக்கையாளர் செலுத்தும் பணத்திற்கு ஈடாக மடா அப் ளிகேஷனில் கிரிப்டோகரன் சிகளை காண்பித்து, பின்னர் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை வைத்து, இவர்கள்குறைவான விலைக்கு கிரிப்டோ கரன்சிகளை வாங்கி போரிஸ் போன்ற வெளிநாட்டினர் சொல்லும் வாலட்டிற்கு தங்களது கமிஷன் தொகையை எடுத்துக் கொண்டு மீதம் உள்ளவற்றை அனுப்பிவிடுவார்கள் என்றும் தெரியவந்தது. இத னையடுத்து பிரவீன்குமார் (வயது 29), விஷால்பவார் (29) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.5 லட்சத்து 85 ஆயிரம் பண மும், குற்ற செயலுக்கு பயன்ப டுத்திய வங்கி கணக்கு புத்த கங்கள், காசோலைகள், கிரி டிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.