சென்னை காசிமேட்டில் அசைவப் பிரியர்கள் தனிமனித இடைவெளியை காற்றில் பறக்கவிட்டு மீன்களை வாங்கிச்சென்றனர்.


தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், சனிக்கிழமையே இறைச்சி மற்றும் மீன்களை வாங்க மக்கள் கடைகளில் குவிந்துவிடுகின்றனர். இதனால், சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் இறைச்சி, மீன் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.


இந்நிலையில், சென்னை காசிமேட்டில் இன்று அதிகாலை முதலே மீன்கள் பொதுமக்கள் குவிந்தனர். கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், அதுகுறித்த அச்சம் இல்லாமல் தனிமனித இடைவெளி இன்றியும், முக கவசம் அணியாமலும் பொதுமக்கள் கூடியது திருவிழா கூட்டம் போல் காட்சி அளித்தது.


இதையடுத்து, முக கவசம் அணியாதவர்களுக்கு போலீசார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், தனிமனித இடை வெளியை பின்பற்றாத கடைகாரர்களை எச்சரித்தனர்.