கட்சியினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்:


கரூர் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்குட்பட்ட 5 -வது வார்டில் புதிதாக தொடங்கிய சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் இடிந்து விழும் நிலையில், சரிவர செய்யாத ஒப்பந்ததாரர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து  கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரூராட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி 5வது மணி நகர் பகுதியில்  கலைஞரின் நகர்புறம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் கழிவு நீர் வடிகால்கள் மற்றும் பேவர் பிளாக் சாலைகள் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பணிகள் மிகவும் மந்தமான நிலையிலேயே நடைபெற்று வந்தன. இந்நிலையில் இங்கு கட்டப்பட்டுள்ள கழிவு நீர் வடிகால்களின் பக்கவாட்டு சுவர்கள் தரமற்ற முறையிலும், கம்பிகள் இல்லாமலும் கட்டப்பட்டுள்ளதால் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், இடிந்தும் காணப்படுகின்றன.


அப்பகுதியில் கட்டப்பட்ட கழிவுநீர் வடிகாலின் பக்கவாட்டு சுவர் தற்போது பெய்த மழையாலும், பக்கவாட்டு சுவர் கம்பிகள் இன்றி  கட்டப்பட்டதால் வடிகால் பக்கவாட்டு சுவர் உடைந்து உடைந்து விழுந்தது. கழிவு நீர் பாதை செல்லும் வழியில் உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்காமல் மின் கம்பங்களுக்கு குறுக்கே கழிவுநீர் செல்வதற்கு வழியின்றி  கட்டியுள்ளனர்.


மேலும், அப்பகுதி மக்கள் கழிவு நீர் வடிகால் பாதை அமைக்கும்போதே ஒப்பந்ததாரிடம் தரமற்ற முறையில் கட்டி விடுவீர்கள் என்று கூறியதற்கு ஒப்பந்ததாரர் பணியினை நிறுத்தி கிடப்பில் போட்டு உள்ளார்.





கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி 15 வார்டுகளை கொண்ட இந்தபேரூராட்சி, திமுகவை சேர்ந்தவர் இப்பேரூராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதில் கிருஷ்ணராயபுரம் 5-வது வார்டு பகுதியை சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் பணியும் 10 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பணி, தரமற்ற முறையில் உள்ளது. தரமற்ற முறையில் கட்டி அப்படியே விட்டு சென்று விட்டனர் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இந்த நிலையில் இன்று கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதியை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியினர், கழிவு நீர் வாய்க்கால் பக்கவாட்டு சுவர் தரமற்ற முறையில் கட்டியதால், இரு பக்கவாட்டு சுவர்களும் சாய்ந்து ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டது.





கழிவுநீர் வாய்க்கால் இரு பக்கவாட்டு சுவர்களுக்கு நடுவிலே மின்கம்பங்களை அகற்றப்படாமல் அப்படியே விட்டுகட்டப்பட்ட கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. தரமற்ற முறையில் கட்டப்பட்ட சாலை மற்றும் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் ஆங்காங்கே விரிசல் விடப்பட்டு கீழே இடிந்து விழுந்த நிலையில் உள்ளது.




எனவே தரமற்ற முறையில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் கட்டியா ஒப்பந்ததாரர் கண்டித்தும் ,இதுவரை கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அதற்கு துணை போன பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும்,கிருஷ்ணராயபுரத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகம் முன்பு பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.