நீர்வரத்து நிலவரம்


காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 14,471 கனஅடி தண்ணீர் வந்த நிலையில்  8,672 கனஅடியாக குறைந்தது. டெல்டா பாசனத்திற்கு ஆற்றில் 7,752 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வினாடிக்கு 177 கன அடியிலிருந்து 646 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.  கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 522 கனஅடி நீர் வந்தது.




நங்காஞ்சி அணை


திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, 30 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து மூன்று பாசனகிளை வாய்க்காலில் தலா, 10 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 39.35 அடியாக இருந்தது. கடவூர் அருகே பொன்னணி ஆறு அணையின் மொத்த உயரமான 51 அடியில் தற்போது 27.90 அடிக்கு நீர் இருப்பு உள்ளது.


ஆத்துப்பாளையம் அணை


கா. பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நடப்பாண்டில் கடந்த மாதம், மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் நொய்யல் வாய்க்காலில் நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால்அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 




காலை 6:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு 57 கன அடி நீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.53 அடியாக இருந்தது. அணை விரைவில் முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் நொய்யல் வாய்க்காலில் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு.




கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக பாலவிடுதியில் 40.2 மில்லிமீட்டர் மழை பெய்தது. காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு கரூர் 5, அரவாக்குறிச்சி 4, அணைப்பாளையம் 6, கா. பரமத்தி 2.2, குளித்தலை 10,5  தோகைமலை 4, கிருஷ்ணராயபுரம் 12, மாயனூர் 12, பஞ்சப்பட்டி 10.6, கடவூர் 12, மயிலம்பட்டி 14.4, ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 11.07 மில்லிமீட்டர் மழை பதிவானது.


கரூர் மாவட்டத்தில் 132.90 மில்லி மீட்டர் மழை.


வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பருடன் முடிவடைய உள்ளது. அக்டோபர்,நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் பெய்யும் மழை தான் ஆண்டின் சராசரி மலை அளவானது 652.208 உதவி வருகிறது. அந்த வகையில் கோடை மற்றும் தென்மேற்கு பருவமழை காலத்தில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனை அடுத்து வடகிழக்கு பருவமழை துவங்கி அக்டோபரில் குறிப்பிட்ட அளவில் மழை பெய்தது. நவம்பர் மாதத்தில் ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்தது. இந்நிலையில், தற்போது டிசம்பர் மாதம் துவங்கி ஐந்து நாட்கள் முடிவுற்ற நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை முடிவடைய 25 நாட்களே உள்ள நிலையில். மாவட்டத்தின் விவசாயம், நீர் போன்ற அனைத்து தேவைகளுக்கும் மழை நீரும் முக்கிய காரணம் என்பதால், மேலும், அதிக அளவு மழையை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.