ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னையிலிருந்து 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குநா் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து போக்குவரத்து கழகம் சார்பில்  வெளியிட்ட செய்திக் குறிப்பு:  வார இறுதி, ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வெள்ளி, சனிக்கிழமைகளில் டிசம்பர் 29, 30 தேதிகளில் சென்னையிலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூா், வேலூா், காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய நகரங்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் செல்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டம் சாா்பில் சென்னையிலிருந்து மேற்கண்ட வழித்தடங்களில் இரு நாள்களிலும் 200 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தாா்.




பொது விடுமுறை:


தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் அரசு பொதுவிடுமுறை தினங்கள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2023ஆம் ஆண்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒன்றரை மாதங்களில் 2024ஆம் ஆண்டு தொடங்க உள்ளளது. இதற்கிடையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தினங்கள் மற்றும் மத ரீதியான பண்டிகைகள் காரணமாக, அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். அரசு பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்படும். வரும் வருடத்தில், பொது விடுமுறை நாட்கள் எத்தனை என்பதை தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அந்த வகையில்,  2024ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில், வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகளை தவிர்த்து, 24 நாட்கள் பொது விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 


24 நாட்கள் விடுமுறை:


தமிழக அரசு வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலின்படி,  ஜனவரி மாதத்தில் ஆங்கிலப் புத்தாண்டு தினமான திங்கள் கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு மூன்று நாட்கள் விடுமுறை இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு ஐந்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 15, 16,17 திங்கள், செவ்வாய், புதன் ஆகிய தினங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், தைப்பூசம் 25ஆம் தேதி வியாழன்கிழமையும், குடியரசு தினம் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  



  • மார்ச் மாதத்தில் புனித வெள்ளி 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ஏப்ரல் மாதத்தில் 9ஆம் தேதி செவ்வாய் கிழமை தெலுங்கு வருடப் பிறப்பிற்கும், ரம்ஜானுக்கு 11ஆம் தேதி வியாழன்கிழமையும், தமிழ்ப்புத்தாண்டு/ அம்பேத்கர் பிறந்தநாளுக்கு 14ஆம் தேதி ஞாயிற்றுகிழமையும், மகாவீரர் ஜெயந்தி 21ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • மே மாதத்தில், 1ஆம் தேதி புதன்கிழமை, மே தினத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • ஜூன் மாதத்தில், 17ஆம் தேதி திங்கட்கிழமை, பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • ஜூலை மாதத்தில், 17ஆம் தேதி புதன்கிழமை மொகரம் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • ஆகஸ்ட் மாதத்தில், 15ஆம் தேதி வியாழன்கிழமை சுதந்திர தினத்துக்கும், 26ஆம் தேதி திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்திக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • செப்டம்பர் மாதத்தில், 7ஆம் தேதி சனிக்கிழமை விநாயகர் சதுர்த்திக்கும், 16ஆம் தேதி திங்கட்கிழமை மிலாதுன் நபிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • அக்டோர் மாதத்தில், 2ஆம் தேதி புதன்கிழமை காந்தி ஜெயந்திக்கும், 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆயுதபூஜைக்கும், 12ஆம் தேதி சனிக்கிழமை விஜயதசமிக்கும், 31ஆம் தேதி வியாழன்கிழமை தீபாவளிக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • டிசம்பர் மாதத்தில், 25ஆம் தேதி புதன்கிழமை, கிருஸ்துமஸ் பண்டிகைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 











 


2024ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதமும் நவம்பர் மாதமும் ஒரு நாள் கூட அரசு விடுமுறை இல்லை. இந்த மேற்கண்ட விடுமுறை நாட்கள் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


எந்தெந்த கிழமைகளில் எத்தனை விடுமுறை?



  • திங்கட்கிழமை - 6 நாட்கள்

  • செவ்வாய் கிழமை - 2 நாட்கள்

  • புதன்கிழமை - 5 நாட்கள்

  • வியாழன்கிழமை - 4 நாட்கள்

  • வெள்ளிக் கிழமை - 3 நாட்கள்

  • சனிக்கிழமை - 2 நாட்கள்

  • ஞாயிற்று கிழமை - 2  நாட்கள்