நீட் தேர்வு  விலக்கு மசோதா குடியரசு தலைவரிடம் உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி உரையில் தகவல் தெரிவித்துள்ளார். 


இன்று தமிழக சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அனைவருக்கும் வணக்கம் என கூறி சட்டப்பேரவையில் தமிழில் தனது உரையை தொடங்கினார் ஆளுநர் ரவி. அதில், “ மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களே என உரையை வாசித்தார் ஆளுநர் ஆர்.என். ரவி. என் இனிய தமிழ் சகோதர சகோதரிகளே அனைவருக்கும் வணக்கம். சட்டப்பேரவையில் எனது உரையை ஆற்றுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்.வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்.” என பேசினார். 


சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழில் பேசிக்கொண்டு இருந்தபோது, 'தமிழ்நாடு எங்கள் நாடு' என அவருக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சியினர் முழக்கமிட்டனர். காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உறுப்பினர்கள் ஆளுநருக்கு எதிராக தற்போது முழக்கமிட்டு ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். 


மேலும் ஆளுநர் உரையில் நீட் தேர்வு முறையானது, கிராமப்புர ஏழை மாணவர்களை மிகவும் பாதிப்பதாகவும், உரிமைகளைப் அமைந்துள்ளது என்பதை இது குறித்து ஆய்வு கருத்தில் செய்வதற்காக, மாநில பறிப்பதாகவும் கொண்டு, நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்களின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவ அளிப்பதற்கான மாணவர் சட்ட சேர்க்கைக்கு முன்வடிவை சட்டமன்றத்தில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளோம். இச்சட்டம் அனைத்தும் சட்ட முன்வடிவிற்கான ஒப்புதலை விரைந்து வழங்க இந்த அரசு வலியுறுத்துகிறது என இடம் பெற்றிருந்தது. 


நீட் தேர்வு விலக்கு பெறும் மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது என ஆளுநர் உரையின் போது தெரிவித்துள்ளார். நீட் தேர்வு மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், கிராமப்புர மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது என உரையில் கூறினார்.