நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி மற்றும் வாடகை தாய் ஆகியோருடைய வயது, ஐ.சி.எம்.ஆர் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகள்படியே குழந்தைகளை பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 


வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெற்றதில் விதிமீறல்கள் உள்ளதாக வந்த புகார் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் சுகாதாரத்துறை விசாரணை நடத்தப்பட்டது.


அந்த விசாரணையின்படி, ”நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர்கள் மற்றும் வாடகை தாய் ஆகியோருடைய வயது, ஐ.சி.எம்.ஆர் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகள்படியே குழந்தைகளை பெற்றுள்ளனர். ஐசிஎம்.ஆர். வழிகாட்டு நெறிமுறைகள்படி, அந்த வாடகைத்தாய்க்கு உரிய தகுதியான வயதில், திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் உள்ளது.


நயன்தாரா - விக்னேஷ் சிவன்  தம்பதியினருக்கு கடந்த 2016, ஆண்டு மார்ச் மாதம் 11-ஆம் தேதி பதிவுத் திருமணம் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது” என்றும் சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. 




சுகாதாரத்துறை வெளியிட்ட முழு அறிக்கை விவரம்: 


சென்னையில் பிரபல திரைப்பட நடிகை ஒருவருக்கு வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகள் பிறந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அத் தம்பதியருக்கு திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளனர். இச்செய்தியை தொடர்ந்து இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களால் 13.10.2022 உயர்மட்ட விசாரணை குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.


விசாரணையில் சென்னையில் உள்ள தனியார் வாடகைத்தாய் மூலமாகவும் அத் தம்பதியர் குழந்தை மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் பெற்றுக்கொண்டதாக தெரிய வந்தது. அம்மருத்துவமனை மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர் மற்றும் வாடகைத்தாய்க்கு பேறுகால சிகிச்சை அளித்த மருத்துவர்களிடமும் நேரடி விசாரணை இக்குழுவால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் அச்சிகிச்சை தொடர்பான விசாரணையில் கீழ்க்காணும் ஆய்வு குறிப்புகள் அறிவிக்கப்படுகிறது.




  • இவ்விசாரணையில் இத்தம்பதி (Intending Couple) மற்றும் வாடகைத்தாய் ஆகியோருடைய வயது. இந்திய மருத்துவ மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு ஆராய்ச்சி நிறுவன (ICMR) செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிய வந்தது.

  • ICMR வழிகாட்டு நெறிமுறைகளின் பிரிவு 3.10.5-ன்படி வாடகைத்தாய்க்கு உரிய தகுதியான வயதிலும் அவருக்கு விசாரணையில் தெரிய வந்தது. திருமணமாகி ஒரு குழந்தை உயிருடன் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • இத்தம்பதியருக்கு (Intending Couple) பதிவு திருமணம் 11.03.2016இல் நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்திருமண பதிவு சான்றிதழின் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • ICMR வழிகாட்டு நெறிமுறைகளின் பிரிவு 3.16.2-ன்படி இந்த தம்பதியர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த விசாரணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


இந்த விசாரணையில் தனியார் மருத்துவமனையில் கீழ்க்கண்ட குறைபாடுகள் இக்குழுவால் கண்டறியப்பட்டது.



  • ICMR வழிகாட்டு முறைகளின்படி, மருத்துவமனையில் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விபரங்கள் மற்றும் வாடகைத்தாயின் உடல் நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும். ஆனால் இதுகுறித்த ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமனையில் பராமரிக்கப்படவில்லை. 


எனவே, மேற்கூறிய வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றாத தனியார் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.