தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியிருக்கும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் இரவு மணியளவில் புயலாக 'மாண்டஸ்' வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. தொடர்ந்து தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு 440 கிலோமீட்டர்  தொலைவிலும், காரைக்காலுக்கு 350 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி மாண்டஸ் புயலின் வேகம் மணிக்கு 12 கி.மீ லிருந்து 13 கி.மீ-ஆக அதிகரித்திருக்கிறது. 




புயலின் காரணமாகக் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கக் கூடும். மேலும், இன்று நள்ளிரவு வேளையில், புதுச்சேரி - ஸ்ரீ ஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையைக் கடக்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது அதி தீவிர புயலாக தீவிரமடைந்துள்ள நகர்ந்து, இன்று இரவு சற்று வலுவிழந்து கரையைக் கடக்க வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.




புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் சென்னை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இன்று நடக்கவிருந்த அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல், மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.




இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் மாலை முதல் கனமழை பெய்ய  தொடங்கி உள்ளது. இதனிடையே நாகைக்கு வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் நாகை கலங்கரை விளக்கு துறைமுகத்தில் கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்டனர். புயல் எச்சரிக்கை காரணமாக சீற்றத்துடன் காணப்படும் கடல் பகுதிகளில் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் நிற்பது, செல்ஃபி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என ஆய்வில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்தனர். மேலும், நாகை மாவட்டத்தில் ஏற்படும் மழை மற்றும் புயல் பாதிப்புகளை சமாளிக்க 25 தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ள நிலையில் மாநில பேரிடர் மீட்பு படையினர் 50 பேர் கூடுதலாக வருகை தந்துள்ளனர்.




இந்த சூழலில் நாகை மாவட்டத்தில்  நாகை மாவட்டத்தில் நாகை , நாகூர், செருதூர், வேளாங்கண்ணி, அக்கரைப்பேட்டை, சிக்கல், திருமருகல், கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடங்கி உள்ளதால் மேகம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், கடல் சீற்றம் காரணமாக கடலோர பகுதிகளில் பலத்த காற்றும் வீசதொடங்கியுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக நாகை துறைமுகத்தில் 5 -ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 


Helpline Numbers: மாண்டஸ் புயல்: மழை..மின்வெட்டு.. மரம் விழுதல்.. சென்னையில், புகார்களுக்கு இந்த உதவி எண்களுக்கு அழைக்கவும்


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற