சென்னைக்கு தென்கிழக்கே 440 கி.மீ தொலைவில் தீவிர புயல் மாண்டஸ் நிலை கொண்டுள்ளது. இந்தநிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக மாறியது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு:
நாளை நள்ளிரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடக்கிறது. காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலு குறைந்து புயலாக இரவு கரையை கடக்கும். மாண்டஸ் புயல் கரையை கடக்கும்போது அதிகபட்சமாக 85 கி.மீ வேகம் வரை காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் எங்கு உள்ளது?
வங்க கடலில் நிலை கொண்டுள்ள மாணடஸ் புயலானது, சுமார் 12 கி.மீ வேகத்தில், தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்புயலானது, சென்னயிலிருந்து தென் கிழக்கு திசையில் சுமார் 480 கி.மீ தொலைவில் உள்ளது. காரைக்காலில் இருந்து கிழக்கு மற்றும் தென் கிழக்கே சுமார் 390 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
எப்பொழுது கரையை கடக்கும்?
சுமார் 12 வேகத்தில் , தமிழ்நாட்டை நோக்கி நக்ர்ந்து வரும் மாண்டஸ் புயலானது, நாளை இரவு ( 7 மணிக்கு மேலாக ), கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே மாமல்லபுரத்துக்கு அருகே நாளை ( டிச.09) நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அலர்ட்:
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் அதீத கன மழைக்கு வாய்ப்புள்ளதால் நாளை டிச.03 ஆம் தேத்கி ரெட் அல்ர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
மாண்டஸ் புயல் நாளை கரையை கடக்கவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 18 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை,விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை,சேலம்,நாமக்கல் ஆகிய 18 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் புதுச்சேரி - காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உதவி/புகார் எண்கள்:
சென்னையில் நாளை கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், மழைநீர் தேங்குதல், மரம் விழுதல், மின் வெட்டு உள்ளிட்ட புகார்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவசர உதவி எண்- 1913
மேலும் உதவி எண்கள்:
1. 044- 25619206
2. 044- 25619207
3. 044- 25619208
09.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்,
சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்,
தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.