சென்னையில் உள்ள முக்கிய பகுதி ராயப்பேட்டை. இந்த பகுதியில் சி.எஸ்.ஐ. மோனஹன் மகளிர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்காகவே விடுதி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் இந்த பள்ளி மீது தலைமைச் செயலாளருக்கும்,  தமிழக டி.ஜி.பி.க்கும் கடிதம் எழுதியுள்ளது.




இதுதொடர்பாக,  தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சி.எஸ்.ஐ. மோகனன் மகளிர் பள்ளியில் கடந்த 6-ந் தேதி சிறப்புக்குழு அதிரடியாக ஆய்வு மேற்கொண்டது.  அந்த ஆய்வில், ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த சிறுமிகளை அழைத்துவந்து கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது தெரியவந்துள்ளது என்றும், அந்த பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு உடனடியாக உதவி தேவைப்படுவதாகவும், அவர்களை உடனே மீட்க வேண்டும் என்றும் அந்த குற்றச்சாட்டில் கூறியுள்ளனர்.




அந்த சிறுமிகளுக்கு விடுதி வார்டனால் தொல்லை அளிக்கப்பட்டு வருகிறது என்பதால், விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை 24 மணி நேரத்தில் மீட்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால், அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் பிரபலமான பள்ளி விடுதியில் உள்ள மாணவிகளை 24 மணி நேரத்தில் மீட்க வேண்டும் என்று டி.ஜி.பி.,க்கும், தலைமைச் செயலாளருக்கும் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையமே கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  


மேலும் படிக்க : Heroin, Wheat : ஹெராயினா, கோதுமையா? பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆயிட்டார்: உயர்நீதிமன்றத்தில் ஒரு சுவாரஸ்ய வழக்கு


மேலும் படிக்க : NEET Marks: பூஜ்ஜியத்துக்கும் குறைவான நீட் மதிப்பெண்: அரசின் நீட் பயிற்சி மையங்களில் பயின்ற மாணவர்கள் நிலை!