கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பேருந்தில் தகராறில் ஈடுபட்ட நரிக்குறவர்கள். பயணிகள் கண்டித்த நிலையில், நரிக்குறவர்களை பேருந்தில் இருந்து இறக்கி விட்ட நடத்துனரின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்திற்கு தினமும் வள்ளியூர் பகுதியில் இருந்து பேருந்தில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பலரும் குழுக்களாக வருவது வழக்கம்.
இவர்கள் நாகர்கோயில் பேருந்து நிலையத்தை சுற்றியும் பேருந்து நிலையத்திலும் ஊசி பாசி விற்பனை செய்வதோடு தினமும் மாலையில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்தில் வள்ளியூர் செல்வது வழக்கம் பொதுவாக மாலை நேரங்களில் இவர்களது குழுக்களுக்குள் ஒருவரை ஒருவர் திட்டி தகராறில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று, திருநெல்வேலி பேருந்தில் பயணிக்க மூன்று குழுக்களாக ஏறியுள்ளனர்.
அதில் அவர்களுக்குள் சண்டையிட்டபடி சத்தமிட்டு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் முகம்சுழித்த நிலையில் அவர்களை இறக்கி விட நடத்துனரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் அவர்களை நடத்துனர் கீழே இறக்கி விட்டுள்ளார்.
குறவர் சமூகம் மீது குற்றம் சுமத்துவதை போலீஸ் கைவிட வேண்டும் - குறிஞ்சியர் சமூக நீதிப் பேரவை கோரிக்கை
இதில் ஏற்கனவே அவர்களுக்குள் சண்டையிட்டு கொண்டு இருந்ததால் அழுது கொண்டு இருந்த குழந்தை, ஒரு முதியவர் மற்றும் பெண்மணி ஒருவர் என மூன்று பேரும் அவர்களது உடமைகளுடன் பேருந்தில் இருந்து இறக்கி விடும் காட்சிகளை வெளியே நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் வீடியோ பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நிலையில், ஏற்கனவே மீனவ பெண் செல்வமேரி பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவத்துடன் இதனையும் ஒப்பிட்டு அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
ABP Nadu Exclusive | "மன அழுத்தத்தில் இருந்திருக்கிறேன்": சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நெகிழ்ச்சி பேட்டி
கன்னியாகுமரியில் நேற்று முன் தினம் மீன் விற்கும் பெண்மணியான செல்வமேரி அரசு பேருந்தில் இருந்து இறக்கவிடப்பட்ட வீடியோ வைரல் ஆனநிலையில், அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துநர், நேரக்கண்காணிப்பாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் வேதனை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது ட்விட்டர் பதிவில் கருத்து பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் அதே கன்னியாகுமரியில் நரிக்குறவர்கள் அரசு பேருந்தில் இருந்து இறக்கவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது