சென்னை பெரியார் நகர் சந்திரசேகரன் சாலை பகுதியில் வசித்து வந்தவர் நல்லம நாயுடு. இவர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரியாவார். இவரது உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி உயிரிழந்தார்.  உடல் தேனி மாவட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. வீட்டில் இருந்த இவரது மகன் சரவணன் மற்றும் உறவினர்கள் தேனி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வருகின்றனர். அன்று முதல் அந்த வீடு பூட்டிய நிலையில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சரவணனின் உறவினர் வீட்டை சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவுகளில் இருந்த பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் , இது குறித்து சரவணனுக்கு தகவல் தெரிவித்தார்.

 



 


பிரபல ரவுடி வெள்ளபள்ளம் வினோத் மற்றும் அவனது கூட்டாளிக்கு 7ஆண்டுகள் சிறை


சரவணன் தனது உறவினரான ஆசைத்தம்பி என்பவரிடம் கூறி வீட்டிற்கு சென்று பார்க்க கூறியுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உள்ளிட்ட பொருட்கள் உடைக்கப்பட்டிருந்தன.  உடனடியாக இது குறித்து பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த 7 சவரன் தங்க நகை மற்றும் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் திருடு போயிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து தேனி மாவட்டத்தில் உள்ள சரவணன் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் தான் திருடு போன நகைகளின் மொத்த மதிப்பு தெரியவரும் எனவும் கூறப்படுகிறது. பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




 

 




 

வியாசர்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து 11 சவரன் தங்க நகை கொள்ளை

 

சென்னை வியாசர்பாடி மெகிசின்புரம் ஆறுமுகம் பிள்ளை தெரு பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (45). இவர் சென்னை மாவட்ட கலெக்டரிடம் தபேதராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 30 ஆம் தேதி வீட்டை பூட்டி கொண்டு அதே பகுதியில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு சென்று விட்டார். அதன் பிறகு வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவின் ஒரு பகுதி உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பொருட்கள் மற்றும் தங்க நகைகள் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 



 


அடப்பாவிகளா...! உங்கள நம்பி கார் குடுத்தா இப்புடியா பண்ணுவிங்க...! - வாடகை காரை அடமானம் வைத்து சூதாடிய 3 பேர் கைது


இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து திருடர்களின் கைரேகை மாதிரிகளை சேகரித்து  பழைய திருடர்களின் கைரேகை ஒத்துப் போகிறதா என்ற கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர். வீட்டிலிருந்து வளையல் நெக்லஸ் கம்மல் செயின் மோதிரம் என 11 சவரன் தங்க நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணம் வெள்ளி பொருட்கள் திருடு போய் உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து வியாசர்பாடி போலீசார் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.