தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஜவாத்புயல் இன்னும் 12 மணிநேரத்தில் வலுப்பெற இருக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, சேலம், நாமக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், ஈரோடு,தருமபுரி, நீலகிரி போன்ற மாவட்டங்கள் 13 மாவட்டங்களுக்கு மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக வடக்கு ஆந்திரா - ஒடிசா கடலோர பகுதிகளில் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 






இதன் காரணமாக, டிசம்பர் 4 ம்(இன்று) தேதி முதல் தமிழ்நாட்டில் ஓரிரு நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யும் என்றும், இந்த புயலானது கரையை கடந்த பின்னர், தமிழ்நாட்டில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 


 


கனமழை காரணமாக மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாமக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வங்கக்கடலில் ஜாவத் புயல் உருவாகி வருகின்றது. இதன் காரணமாக சூறாவளி வீச இருக்கும் பகுதிகளில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், தென் தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 






 


தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்யும் என்றும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்னும் ஓரிரு நாட்களுக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண