Seeman: சிவகங்கையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் மேடையில் உடைந்து கண்ணீர் விட்டு அழுதது அவரது கட்சிக்காரர்களிடம் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. 


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சிவகங்கையில் தனது இல்ல நிகழ்ச்சி ஒன்றில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சை ரசிக்காத நபர்கள் இருக்கிறார்கள் என்றால், அது அவரது பேச்சை கேட்காத நபராகத் தான் இருக்க முடியும். அந்த அளவிற்கு பெரும் கூட்டத்தை தனது லாவகமான, ஆங்கிலம் கலக்காத, கேட்போரை உணர்ச்சிவசப்படுத்தும் படியாக பேசக்கூடியவர் சீமான். 


தமிழ்நாட்டில் அவரது பேச்சுக்கு என தனி ரசிகர் பட்டாளம் அவரது கட்சியை கடந்து இருக்கிறது. அரசியல் மேடையோ, விவாத மேடையோ, செய்தியாளர் சந்திப்போ இப்படியான வரிசையில் தான் கொண்ட கொள்கை குறித்து அனைவரையும் கவரும் வகையில் பேசும் திறமை கொண்டவரான சீமான், சிவகங்கையில் நடந்த தனது இல்ல விழாவில் உடைந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். 


எப்போதும் உணர்ச்சிகளை கொப்பளிக்கும் படியாக பேசக்கூடிய சீமான், தனது சகோதரி மகள் கயல்விழியின் நிச்சயதார்த்தத்தில் கண்ணீர் விட்டு உடைந்து அழுதுள்ளார். இதனைப் பார்த்த அவரது சகோதரி சீமானை ஆரத் தழுவி தேற்றினார். கயல்விழி சிறு வயதில் இருந்தே சீமானால் வளர்க்கப்பட்டவர். தான் தூக்கி வளர்த்த குழந்தை இன்று தனது தோளுக்கு மேல் வளர்ந்து திருமணக் கோலத்தில் நிற்பதைப் பார்த்த சீமான், இந்த நிகழ்வின் தொடக்கத்தில் இருந்தே உணர்ச்சி வசத்துடன் தான் இருந்துள்ளார். 


மணமக்களை வாழ்த்த மேடைக்கு சென்ற சீமானின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய மணமக்களை வாழ்த்தும் போது சீமான் கண்ணீர் விட்டு உடைந்து அழுதார். மேற்கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசும் போது மணமகள் கயல்விழியை தான் வளர்த்து ஆளாக்கியதை நினைத்து மீண்டும் உடைந்து அழுதார்.  அவரது அழுகையைப் பார்த்த அவரது சகோதரி உடனே மேடைக்கு வந்து சீமானை ஆரத் தழுவி  தேற்றினார். இந்த சம்பவம் நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.