குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, இலங்கையின் மேற்கு கடலோர பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது  நேற்று (04.02.2023) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது இன்று மேலும் வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக,


05.02.2023 முதல் 07.02.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.


08.02.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு  இடங்களில் லேசான / மிதமான மழை   பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):   


வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) 10, செம்பனார்கோயில் (PWD) (மயிலாடுதுறை) 7, திருப்பூண்டி (நாகப்பட்டினம்), பொன்னமராவதி (புதுக்கோட்டை) ஊத்து (திருநெல்வேலி) தலா 6, நாலுமுக்கு (திருநெல்வேலி) 5, மன்னார்குடி (திருவாரூர்), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), வெட்டிகாடு (தஞ்சாவூர்) தலா 4, காரையூர் (புதுக்கோட்டை), சீர்காளி (மயிலாடுதுறை), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), திருமயம் (புதுக்கோட்டை), அதனக்கோட்டை (புதுக்கோட்டை), கறம்பக்குடி (புதுக்கோட்டை), தலைஞாயர் (நாகப்பட்டினம்), நீடாமங்கலம் (திருவாரூர்), (திருவாரூர்), (திருவாரூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), ஒர்த்தநாடு (தஞ்சாவூர்), மஞ்சளாறு (தஞ்சாவூர்), தஞ்சாவூர் (தஞ்சாவூர்) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:        


குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு பகுதிகளில்  சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.