முத்துப்பேட்டை அலையாத்திகாடுக்கு சுற்றுலா செல்ல தடை. கொரோனா வைரஸ் மூன்றாவது அலை எதிரொலியாக வனத்துறை உத்தரவு.
தமிழ்நாட்டில் சிதம்பரம் பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் சதுப்புநில காடுகள் அதிக அளவில் உள்ளன. இந்த நிலையில் இந்த பகுதிகளை சுற்றுலா தலமாக தமிழக அரசு அறிவித்து நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான மக்கள் தொடர்ந்து சுற்றுலா வந்து செல்கின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள அலையாத்தி காடுகள் கடந்த 2006 ஆம் ஆண்டு சுனாமி தாக்குதலின் போது திருவாரூர் மாவட்டத்தை கடல் அலையில் இருந்து பொதுமக்களை பாதுகாத்த பெருமை அலையாத்தி காடுகளுக்கு உண்டு என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அதனை அடுத்து முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளை பாதுகாக்கும் வகையில் தமிழக வனத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஏராளமான மக்கள் நாள்தோறும் இந்த இடத்திற்கு வருகை தந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரபரபளவுக் கொண்ட காடாகும். 11,885,91 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படக்கூடிய இக்காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மற்றுமின்றி இந்தியாவில் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் தற்பொழுது கொரோனா வைரஸ் மூன்றாவது அலை எதிரொலியாக தமிழக அரசு மீண்டும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவின் அறிய பகுதியாகவும், தமிழ்நாட்டின் மிகப் பெரிய சுற்றுலா தளமாக கருதப்படும் முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா செல்ல வனத்துறை தடை செய்துள்ளது என மாவட்ட வன அலுவலர் அறிவொளி கூறியுள்ளார். இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் அறிவொளி கூறுகையில்... நமது நாட்டின் மிகப்பெரிய காடான இப்பகுதியில் உள்ள அலையாத்திகாடு இப்பகுதி கிடைத்த ஒரு பொக்கிஷம், இதனை காண தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இந்தநிலையில் தற்பொழுது கொரோனா வைரஸ் மூன்றாவது அலை பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் இந்த நோயிலிருந்து பாதுக்காக்கும் வகையில் இன்று முதல் அலையாத்திக் காட்டுக்கு சுற்றுலா செல்லவும், சுற்றுலா பயணிகள் படகுகள் செல்லவும் மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றார்.
குறிப்பாக முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் கடந்த கஜா புயல் தாக்கத்தின் போது கடுமையான பாதிப்பை சந்தித்தது. சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டு அங்கு இருந்த பலகைகள் மற்றும் செல்லும் வழியில் அமைக்கப்பட்ட வழித்தடங்கள் அனைத்தும் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டன. அதன் பின்னர் அதனை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த நிலையில் அதற்கான பணிகளை வனத்துறை சார்பில் எடுக்கப்பட்டு வந்தது பின்னர் வழக்கம்போல் ஏராளமான சுற்றுலா பயணிகள் அலையாத்தி காடுகளுக்கு வருகைதந்து வந்திருந்த நிலையில் மீண்டும் கொரோனா தாக்கத்தின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில் மக்களின் நலனுக்காக இந்த அறிவிப்பு விடப்பட்டு இருப்பதால் இதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.