கரூர், மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு.


 




 


கரூர், மாயனூர் காவிரியாறு கதவணையில் 13 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறியது. மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. கரூர் மாவட்டம், கதவணைக்கு, வினாடிக்கு, 11 ஆயிரத்து, 886 கன அடி தண்ணீர் வந்தது. காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து,  13 ஆயிரம் கன அடி தண்ணீர் அதிகரித்தது . அதில், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 13  ஆயிரத்து, 329 கன அடியும், தென்கரை வாக்காலில், 500 கன அடியில் தண்ணீரும் திறக்கப்பட்டது. கீழ்கட்டளை வாய்க்கால் மற்றும் கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.



அமராவதி அணை


 




திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 551 கன அடியாக தண்ணீர் வந்தது. 90 அடி கொண்ட அணையின் நீர்மட்டம், 63. 16 அடி ஆக இருந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 218 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீரும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


 



 


 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண