வாகன ஓட்டிகளுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என்பது போன்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை என விளக்கம் அளித்துள்ளது. 


வாகன ஓட்டிகளுக்கு 1000?


தமிழ்நாட்டில் உள்ள வாகன ஓட்டிகளுக்கு தமிழ்நாடு அரசு ரூபாய் ஆயிரம் நிவாரணம் வழங்கவுள்ளதாகவும், அதற்கு சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ அலுவலகத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இன்று காலை சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பலரால் பகிரப்பட்டது. இது குறித்து தமிழ்நாடு போக்குவரத்து துறை “இந்த தகவல் தவறானது என்றும், அவ்வாறு அறிக்கை வெளியிடப்படவில்லை எனவும், தவறான தகவலை பரப்புபவர்கள் மீது காவல்துறை கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.