MOTN Survey: தமிழ்நாட்டுல பாஜக வளரவே இல்ல..இப்ப தேர்தல் நடந்தாலும் திமுக தான் ஜெயிக்கும் - கருத்துக்கணிப்பு

தமிழ்நாட்டுல, இன்றைய தேதில தேர்தல் நடந்தா, அதுல திமுக தான் ஜெயிக்கும்னும், பாஜக வளரவே இல்லைன்னும் ஒரு கருத்துக்கணிப்பு சொல்லுது. அது எந்த கருத்துக்கணிப்புன்னு பார்க்கலாம்.

Continues below advertisement

தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் மக்களவை தேர்தல் நடந்தால், அதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பிரபல ஊடக நிறுவனம் ஒன்றும், பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனம் ஒன்றும் இணைந்து நடத்திய அந்த கருத்துக்கணிப்பின் முடிவுகளை இப்போது காணலாம்.

Continues below advertisement

"MOTN" - Mood Of The Nation(தேசத்தின் மனநிலை) கருத்துக்கணிப்பு

இந்தியாவில் பிரபல ஊடகளில் ஒன்றான இந்தியா டுடேவும், பிரபல தேர்தல் கருத்துக்கணிப்பு நிறுவனமான சி வோட்டர்ஸ்-ம் இணைந்து, ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி உள்ளனர். தேசத்தின் மனநிலை என்று தலைப்பிடப்பட்ட அந்த கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் மக்களவை தேர்தல் நடந்தால், அதில் எந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்பது குறித்தும் தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

2025 ஜனவரி 2-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை நடத்தப்பட்டுள்ள இந்த கருத்துக்கணிப்பில், 1 லட்சத்து 25 ஆயிரத்து 123 பேரிடம் தேர்தல் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன. அந்த தரவு மற்றும் முந்தைய தரவுகளை ஒப்பிட்டு, தற்போதைய கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டள்ளது.

கருத்துக்கணிப்பில் பூஜ்ஜியமான பாஜக, அதிமுக

இந்த கருத்துக்கணிப்பின்படி, தமிழ்நாட்டில் இன்றைய தேதியில் மக்களவை தேர்தல் நடந்தால், அதில் மீண்டும் திமுக கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.  பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

கருத்துக்கணிப்பின்படி கட்சிகளின் வாக்கு சதவீதம்

இந்த கருத்துக்கணிப்பின்படி,

  • இந்தியா(திமுக) கூட்டணி - முந்தைய தேர்தலைவிட 5% கூடுதல் வாக்குகளுடன் 52% வாக்குகளை பெறும்.
  • பாஜக - முந்தைய தேர்தலைவிட 3% கூடுதலாக பெற்று 21% வாக்குகளை பெறுகிறது.
  • அதிமுக - முந்தைய தேர்தலைவிட 3% குறைவாக பெற்று 20% வாக்குகளை பெறகிறது.

ஆக மொத்தம், இந்த கருத்துக்கணிப்பு, அண்ணாமலையின் கடும் போராட்டத்திற்குப் பின்னும், தமிழ்நாட்டில் பாஜக பெரிய அளவில் வளரவில்லை என்பதையே காட்டுகிறது. மறுபுறம் அதிமுகவும் பல சிக்கல்கலில் உள்ளதால், கூட்டணி அமைத்தால் மட்டுமே தப்ப முடியும் என்ற நிலைமையே உள்ளதும் இந்த கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவருகிறது.

Continues below advertisement