Annamalai Vs TVK: தவெக-வை நக்கலடித்த அண்ணாமலை... என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?

தமிழக வெற்றிக் கழகத்தில் குழந்தைகள் அணி உருவாக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி அண்ணாமலை கிண்டலடித்துள்ளார். அவர் என்ன கூறினார் தெரியுமா.?

Continues below advertisement

அரசியலில் அடுத்தடுத்து அதிரடி காட்டி வரும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது கட்சியையும் நவீனமாக கட்டமைத்து வருகிறார். அந்த வகையில், தவெகவில் உருவாக்கப்பட்டுள்ள அணிகளின் விவரங்களை சமீபத்தில் வெளியிட்டார். அதில், குழந்தைகள் அணி இடம்பெற்றிருப்பது குறித்து, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கிண்டலடித்துள்ளார்.

Continues below advertisement

தவெக உருவாக்கியுள்ள அணிகள்

தமிழக வெற்றிக் கழகம் வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சியை கட்டமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். ஒருபுறம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி பயணித்துக்கொண்டே, கட்சியை பலப்படுத்தும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் கட்சியில் 28 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த பட்டியலையும் வெளியிட்டார். திருநங்கைகள் அணி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் அணி, அதில், பேசுபொருளாக மாறியுள்ள அணி, குழந்தைகள் அணிதான்.

இந்தியாவில், 18 வயதிற்குட்பட்டோரை கட்சி மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றமான செயலாக கருதப்படுகிறது. இந்த நிலையில், இந்த குழந்தைகள் அணி குறித்து ஆட்சேபனை எழுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும், இந்த குழந்தைகள் பிரிவு, சிறார்களின் நலன் காக்கும் வகையில் செயல்படும் என தெரிகிறது.

தவெகவின் குழந்தைகள் அணி குறித்து அண்ணாமலை கிண்டல்

தவெக-வில் குழந்தைகள் அணி உருவாக்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு தரப்புகளும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அது குறித்து கிண்டலாக பேசியுள்ளார். சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், ”தமிழக வெற்றிக் கழகத்தில் இருப்பதே குழந்தை பசங்கதான், அதனாலதான் Childrens Wing உருவாக்கியிருக்கிறார்கள் என்று நக்கலடித்துள்ளார்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola