தமிழ்நாட்டின் புதிய சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை கிராமத்தில் பிறந்த சைலேந்திரபாபு ஐபிஎஸ், சாதாரணக இருந்த தனது வாழ்க்கையை அசாதாரணமானதாக மாற்ற கடுமையாக உழைத்தவர்.


தனது அனுபவம் மூலம் சாதிக்க துடிக்கும் பலருக்கும் ‘இன்ஸ்பிரேஷனாக’ இருக்கும் அவர், நீங்களும் ஐபிஎஸ் அதிகாரி ஆகலாம், சாதிக்க ஆசைப்படு, உடலினை உறுதி செய், அவர்களால் முடியும் என்றால் நம்மாலும் முடியும், உனக்குள் ஒரு தலைவன், ஏ கைட் ஆப் ஹெல்த் அண்டு ஹாப்பினஸ் என்று 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார்.


இந்த காலகட்டத்தில், சமூகவலைதள பக்கங்களை ஆக்டீவ்வாக பயன்படுத்தும் அரசு அதிகாரிகள், மக்களிடம் இருந்து நிறை குறைகளை கேட்டறிந்து உடனடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வரிசையில், புத்தகங்கள் எழுதுவது மட்டுமின்றி, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதள பக்கங்கள் மூலமகாவும் தொடர்ந்து மக்களோடு உரையாடி வருகிறார். இளைஞர்களும், இவரிடம் பல கேள்விகளை கேட்டு அதற்கான பதில்களை பெற்று வருகின்றனர். 


தனது வேலை பளு நேரத்திற்கும் மத்தியில், சமூகவலைதளத்தில் ஆக்டீவாக இயங்கும் சைலேந்திர பாபு ஐபிஎஸ்-ன் சில ஹிட் பதிவுகளின் தொகுப்பு இங்கே!