"எதிர்பார்ப்பு ஏதுமின்றி
அள்ளி அணைத்து ஆரத்தழுவி
செல்லமே என கொஞ்சி மகிழ்ந்திட 
இப்புவியில் அன்னை அன்றி வேறாருண்டு..."


மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையில் அன்னையர் தினம்(Mothers Day) கொண்டாடப்படுகிறது. அதன் படி வரும் ஞாயிற்றுக் கிழமை (மே 14)  அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அம்மா- குழந்தை உறவு உலகத்தில் உள்ள மற்ற எல்லா உறவுகளை விடவும் உன்னதமானது. இருந்த போதிலும் நாம் காதலர் தினத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் அன்னையர் தினத்திற்கு கொடுப்பதில்லை?


அன்னையர் தினம்:


காதலர் தினம் போன்று அன்னையர் தினம் பரபரப்பானதாகவும், உற்சாகமானதாகவும் காணப்படுவதில்லை. இதற்கு காரணம் காதலர் தினத்தன்று காதலர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கின்றனர். ப்ரோபஸ் செய்ய ஜோடிகள் அதிகமாக ரோஜாக்களை வாங்குவார்கள் என்பதால் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். மேலும் எந்த நிறந்திலான உடை அணிந்தால் என்ன அர்த்தம் என்பதை அறிந்து, அதற்கேற்றார் போல் உடை அணிந்து செல்வதில் காதலர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இன்னும் சொல்லப்போனாம் காதலில் தோல்வியுற்றவர் கூட அதை வெளிப்படுத்தும் விதமாக காதலர் தினத்தன்று கருப்பு நிற உடை அணிந்து கொள்கின்றனர். 


ஒரு பரிசு கூட கிடையாதா?


ஆனால் அன்னையர் தினமோ கேட்பாரற்று கிடக்கின்றது. ஆம் காலையில் எழுந்த உடன், அம்மாவை கட்டியணைத்து ஹாப்பி மதர்ஸ் டே அம்மா, அல்லது அன்னையர் தின வாழ்த்துகள் அம்மா என கூறி விட்டு மிகவும் கேஷூவலாக சென்று விடுமோம். அம்மாவும் பிள்ளை வாழ்த்து சொன்னதை எண்ணி பூரித்து போவாள்.  இதுவே காதலர் தினத்திற்கு கிப்ட் எதுவும் கொடுக்காமல் வெறுமனே வாழ்த்து செல்லி விட்டு சென்றால் என்னவாகும்? பிரேக் அப் ஆவது உறுதி. 


இறுதி வரை உடன் வருவார்களா என தெரியாக காதலனுக்கோ, காதலிக்கோ தேடி தேடி விலை உயர்ந்த பரிசுகளை வாங்கி கொடுக்கும் போது, அவளின் மொத்த வாழ்க்கையையும் நமக்காகவே வாழும் தாய்க்கு ஏன் ஒரு பரிசு வாங்கி கொடுக்க கூடாது?


என்ன செய்யலாம்?


உண்மையாகவே ஒரு தாய் தன் பிள்ளையிடம் இருந்து அன்பை தவிர விலை உயர்ந்த பரிசு பொருட்களை எதிர்பார்ப்பதில்லை.  எனவே  இந்த அன்னையர் தினத்திற்கு அம்மாவுடன் நேரம் செலவிடலாம். எங்கேயாவது வெளியில் அழைத்துச் சென்று அம்மாவை குஷிப்படுத்தலாம். அல்லது வீட்டில் இருந்த படியே அன்று ஒரு நாள் அம்மாவுக்கு பிடித்த உணவுகளை சமைத்துக் கொடுத்து அந்த நாளை அவளுக்கு ஸ்பெஷலானதாக்கலாம். இவை எல்லாம் இல்லா விட்டாலும் அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து திருப்தி பட்டுக் கொள்ளலாம். நமக்காகவே வாழும் அவளுக்காக ஏன் இந்த ஒரு நாளை மெனக்கிட கூடாது?