குளித்தலை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திட்ட பணிகளுக்கு எம்எல்ஏ பூமி பூஜை

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 29.60 லட்சம் மதிப்பில்  சுமார் 690 மீட்டர் வரை புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பூமி பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார்.

Continues below advertisement

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 35.40 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கு எம்எல்ஏ பூமி பூஜையிட்டு துவக்கி வைத்தார்.

Continues below advertisement

 

 


கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருப்பத்தூர் ஊராட்சி மேல தாளியாம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 29.60 லட்சம் மதிப்பில்  சுமார் 690 மீட்டர் வரை புதிய தார்ச்சாலை அமைக்கும் பணிக்கு குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பூமி பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார்.

 


 

அதேபோல் சிந்தலவாடி ஊராட்சி புனவாசிப்பட்டி அந்தரப்பட்டி சாலையில் 5.80 லட்சம்  மதிப்பில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கும் பூமி பூஜையிட்டு பணிகளை துவக்கி வைத்தார். முன்னதாக குளித்தலை நகராட்சியில் மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டிலேயே நிதியிலிருந்து ரூபாய் 21 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய இரண்டு வகுப்பறை கட்டிடங்களை பள்ளி மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

 

 


 

குளித்தலை நகராட்சி சேர்மன் சகுந்தலா, திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பல்லவி ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாபருல்லா, மாவட்ட பிரதிநிதி மெடிக்கல் மாணிக்கம், அலுவலர் தவமணி, வட்டார கல்வி அலுவலர் ரமணி,  பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி ராஜா, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய குழு தலைவர்  சுமித்ராதேவி, ஊராட்சி மன்ற தலைவர் ரங்கம்மாள் சக்திவேல், துணைத் தலைவர் கருப்பையா, ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பிரமணி, கோபாலகிருஷ்ணன், குளித்தலை நகர வார்டு கவுன்சிலர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், திமுக பிரதிநிதிகள் பலரும் உடன் இருந்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola