படிக்காமலே சாதிக்கலாம் என யாராவது கூறினால், அது எரிச்சலில் வரும் வார்த்தைதான் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். 


எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் பேசியதாவது, “ எண்ணும் எழுத்தும் கண்ணென  தகும் என்றார் ஒளவையார். அந்த தமிழ் மூதாட்டியின் வழியிலேயே இந்தத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக 1 1/2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் மாணவர்களின் கல்வியில் ஒரு பின்னடைவு ஏற்பட்டு இருந்தது.


 



அதனை குறைக்கவும், அதன் ஆற்றலை அதிகப்படுத்தவும் இந்தத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய யுக்தி தேவை என்பதற்காகத்தான் இந்த்திட்டத்தை நாம் வகுத்து இருக்கிறோம். ஒவ்வொரு குழந்தையும் கற்றல் திறனை மேம்படுத்த இந்த்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரயேத்மாக ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் கல்வித்துறை சார்ந்த அலுவலர்களும் அதிகாரிகளும் இதில் இருப்பார்கள். தமிழ், ஆங்கிலம், கணக்கு ஆகிய ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.


 


இவர்கள் தேசிய மற்றும் மாவட்ட அளவில் ஆலோசனைகள் நடத்தி இந்தத்திட்டங்களை சீர் செய்வார்கள். இதற்காக தொடக்க பள்ளி ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. தொடக்கப் பருவத்தில் கல்வியை தரவேண்டிய கடமை பெற்றோருக்கும் அரசுக்கும் உள்ளது. அனைவருக்கும்  கல்வி என்பதே திராவிட மாடலின் நோக்கம். கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் இயக்கமாக திமுக இருக்கிறது. 




படிக்காமல் சாதித்துகாட்டிய யாரையாவது ஒருவரை காட்டினால், அதற்கு இணையாக படித்து சாதித்துக்காட்டிய லட்சம் பேரை நம்மால் எடுத்துக்காட்ட முடியும். படிக்காமலேயே சாதிக்கலாம் என்று யாராவது சொன்னால் அது தன்னம்பிக்கை ஊட்டுவது அல்ல.  அது வெறும் ஆசை வார்த்தை. இவர்களெல்லாம் படித்து முன்னேறுகிறார்களே என்ற எரிச்சலில் தவறான பாதைக்கு கைகாட்டும் சூழ்ச்சி அது” என்று பேசினார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண