தமிழ்நாட்டில் புதிதாக அமைய இருக்கும் விமான நிலையம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமையும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து மு.க.ஸ்டாலின் கூறுகையில்,


தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் குறிக்கோளை எட்டும் பயணத்தில் புதிய விமான நிலையம் ஒரு மைல்கல்.


சென்னை விமான நிலையம் மற்றும் புதிதாக அமைக்கப்படும் விமான நிலையம் ஆகிய இரண்டும் சேர்ந்து செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.  புதிய விமான நிலையத்திற்காக இட அனுமதி ஒப்புதல் பெற்ற பிறகு நிலம் கையகப்படுத்தப்படும். புதிய இடத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்புதல் பெற விட்ரைவில் தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் விண்ணப்பிக்கும். ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பில் விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.  இரண்டு ஓடுதளங்கள், விமான நிலைய முனையங்கள், இணைப்பு பாதைகள், விமானஙக்ள் நிறுத்துமிடம், சரக்கு கையாளும் முனையம் உள்ளிடவை இடம்பெறும். பரந்தூரில் அமைய இருக்கும் இரண்டாவது விமான நிலையம் 10 கோடி பயனாளர்களை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். “ என்று அவர் தெரிவித்துள்ளார்.






 


அதிகரிக்கும் போக்குவரத்து:


தமிழ்நாட்டில் சர்வதேச விமான போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனை கருத்தில் கொண்டு, சென்னையில் மேலும் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. இது தொடர்பாக இடத்தை தேர்வு செய்து அனுப்புமாறு, தமிழ்நாட்டு அரசை, மத்திய அரசை கேட்டுக் கொண்டது. அதனடிப்படையில் பன்னூர், பரந்தூர் ஆகிய இரண்டு இடங்கள் தமிழ்நாடு அரசு சார்பாக மத்திய அரசிடம் முன்முழியப்பட்டன.  


கனிமொழி சோமு கேள்வி:


இந்நிலையில், புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மாநிலங்களவையில்,டாக்டர் கனிமொழி எம்.பி., கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங், சென்னை பரந்தூரில் 2வது சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளதாக தெரிவித்தார். 


சென்னை பரந்தூரில் அமையவுள்ள சர்வதேச விமான நிலையமானது ரூ. 40 ஆயிரம் கோடி செலவில் கட்டப்படும் என கூறப்படுகிறது.






இந்த புதிய விமான நிலையத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண