தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) ரவுகளின்படி குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவாக நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

தமிழகத்தில் குற்றச்செயல்கள் அதிகரிப்பா? 

தமிழகத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், NCRB ரிப்போர்ட்டை மேற்கோள் காட்டி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு பதிலடி அளித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்திற்கு தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் அளித்த பேட்டியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அவர், "தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகிவிட்டதாகப் பரப்பப்படும் அடிப்படையற்ற விஷமப் பிரசாரங்களுக்கு பதிலடி தரும் வகையில் அமைந்துள்ள தமிழ்நாடு DGPயின் நேர்காணலைப் பகிர்கிறேன்.

Continues below advertisement

NCRB ரிப்போர்ட்டை எடுத்து காட்டிய ஸ்டாலின்:

 #NCRB தரவுகளின்படி குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைவாக நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. அதேநேரம், #POCSO குற்றங்களை எந்தவித அச்சமும் இல்லாமல், காவல்நிலையத்தில் நம்பிக்கையோடு புகாரளிக்கும் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

 

அச்சமின்றிப் புகாரளித்தால்தான், குற்றவாளியை முதல் குற்றத்தின்போதே கைதுசெய்து தண்டனை பெற்றுத்தரமுடியும். இத்தகைய நபர்கள் மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க இது மிக அவசியம். ஏற்கெனவே நான் கூறியது போல, குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் #ZeroTolerance - விரைவான விசாரணை - அதிகபட்ச தண்டனை - முன்விடுதலை இல்லை என்பதே நமது அரசின் policy" என குறிப்பிட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை மேற்கொண்டன. பெரும் பரபரப்புக்கு மத்தியில், சம்பவம் நடந்து 5 மாதங்களில் வழக்கு விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

இதையும் படிக்க: iPhone 16 Discount: ஐஃபோன் பிரியரா நீங்க.? சான்ஸ விட்டுடாதீங்க.. iPhone 16-ல ரூ.9,901 அதிரடி தள்ளுபடி - எங்க தெரியுமா.?