தமிழுக்குப் பதிலாக இந்தியை கொண்டு வரும் எந்த முயற்சியையும் எதிர்ப்போம்  என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நியூ இந்தியா அசுரன்ஸ் நிறுவனத்தில் இந்தி அதிகாரப்பூர்வ மொழி என்ற அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 


பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான நியூ இந்தியா அசுரன்ஸில் அலுவல் மற்றும் வாடிக்கையாளார் தொடர்பு மொழியாக இந்தி மட்டுமே பேச, எழுத வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இது மத்திய அலுவல் மொழி துறையிடமிருந்து வெளியிடப்பட்டுள்ள வழிமுறை அறிவிப்பு குறித்தும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 




முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்:


இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். “ மக்கள் நலனுக்கான திட்டங்களை விட, மத்திய அரசு இந்திக்கு அளிக்கப்படும் தகுதியற்ற சிறப்பு அந்தஸ்தை அகற்ற வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொருவரின் பங்கும் நிறைந்திருக்கிறது. நாட்டின் பன்முகத் தன்மையை நம்புகிறோம். நமது மொழிகள் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்தியை திணிப்பதற்காக தங்களது மதிப்புமிக்க வளங்களை செலவழிப்பதில் மத்திய அரசு மிக கவனமாக உள்ளது. 


நியூஇந்தியா அசுரன்ஸ் நிறுவனத்தின் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பு சரியானது அல்ல; அந்த நிறுவனத்தின் தலைவர் நீர்ஜா கபூர் இந்தி பேசாத ஊழியர்கள், மக்களுக்கு எதிரான இந்தச் செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். போலவே, இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்.  






இந்தியாவில் உள்ள மற்ற மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தராமல் இந்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இரயில்வே துறை, தபால் துறை, வங்கி துறை, நாடாளுமன்ற உள்ளிட்ட துறைகளில் இந்தி மொழிக்கு கிடைக்கும் தகுதியற்ற சிறப்பு அந்தஸ்தை, அன்றாடம் மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் இந்தி திணிப்பை முற்றிலுமாக ஒடுக்க வேண்டும். இந்தி திணிப்பை எதிர்த்து தமிழ்நாடு, தி.மு.க. போராடிய வரலாறு இருக்கிறது. தொடர்ந்து போராடும்.


ஒவ்வொருவரும் வரி செலுத்துகிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறோம். வேற்றுமையில்தான் நாட்டின் வலிமைமிக்க பாரம்பரியம் இருப்பதாக நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.