பிரதமர் மோடி இன்று தெலங்கானா மற்றும் தமிழ்நாடு பயணம் மேற்கொள்கிறார். அதில் முதலாவதாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அவருக்கு விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.  அதைத் தொடர்ந்து அவர் ஐஎஸ்பி கல்லூரியின் 20ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்றார். அங்கு அவர் உறையாற்றினார்.  அதைத் தொடர்ந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த பிரதமரை மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர்கள் துறைமுருகன், பொன்முடி உள்ளிட்டோர் வரவேற்றனர். 


சென்னை விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் அடையாறு கப்பல்படை தளத்திற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அதன்பின்பு சாலை மார்க்கமாக பிரதமர் மோடி நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு சென்றார். அப்போது வழி நெடுகிலும் திரண்டு இருந்த பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர் பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு சென்றார்.


அங்கு நடைபெற்ற விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்பு உரையாற்றினார். அதில், “பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பிற்காக 31ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்” எனக் கூறி வரவேற்றார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், “தமிழ்நாட்டில் திமுக அரசு பதவியேற்ற பிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் அரசு விழா இதுதான். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக திட்டங்களை தொடங்கி வைக்க வந்த பிரதமருக்கு நான் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன். பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் திட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான திட்டங்களாகும்.


இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டி மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, சமூகநீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி. தமிழ்நாடு போன்ற வளர்ச்சி மாநிலங்கள் அளிக்கும் பங்கிற்கு ஏற்ப மத்திய அரசு நிதியுதவி மற்றும் திட்டங்களை அளிக்க வேண்டும். தமிழ்நாட்டின் முக்கியமான கோரிக்கைகள் முன்வைக்கிறேன். 


முதலில் மீனவர்களின் நலனுக்காக கச்சதீவை மீட்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை விரைந்து வழங்க வேண்டும். பழமைக்கும் பழைமையாக உள்ள உலக செம்மொழியான தமிழை இந்திக்கு இணையான அலுவல் மற்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாகவும் அறிவிக்க வேண்டும். மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதலை மத்திய அரசு அளிக்க வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண