அன்பார்ந்த ABP நாடு வாசகர்களே வணக்கம்... 2026 பலன்களை இரண்டாகப் பிரிக்கலாம்... மே மாத இறுதிவரை உங்களுடைய ராசிக்கு... வாய்ப்புகள் வாசப்படியில் வந்து நிற்கும்... ஆனால் அந்த வாய்ப்புகளை எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்ற தயக்கம் உங்களுக்கு இருக்கும்... திருமண பேச்சுவார்த்தை மற்றும் சுப காரியங்கள் கைகூடி வருவது போல தெரியும்... ஆனால் அதில் உள்ள செலவுகளோ அல்லது விரயங்களை பற்றியோ அதிகமாக கவலைப்பட வேண்டியது வரும்.... நல்ல புதிய திட்டங்களை தீட்டுவீர்கள் அது என்னவாக முடியுமோ என்ற பயம் இருக்கும்..... அப்படியானால் நிச்சயமாக கையில் இருந்த பணத்தையோ அல்லது சிறு தொகையையோ செலவிட வேண்டியது வரலாம்... ராசி பலன்களை பொறுத்தவரை அவரவர் சொந்த ஜாதகத்தின் தசா புத்தியில் பல அற்புதமான பலன்கள் உங்களுக்கு நடைபெறும்.... என்னதான் கோச்சாரத்தில் கிரகங்கள் நன்மை தீமை என்ற அடிப்படையில் செயல்பட்டாலும் கூட அதிகப்படியாக வாழ்க்கையில் உங்களுக்கு உழைப்புக்கு ஏற்ற பலன் என்ற அடிப்படையில் தான் வாழ்க்கை நகரும்....
மிதுன ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் ராகு பகவான் அமர்ந்திருக்கிறார்... நல்ல பலன் தான் ஏற்கனவே உங்களுக்கு எல்லாம் இருப்பது போல ஒரு சின்ன மாயை தோன்றும்... அனைவரும் உங்கள் இடத்தில் நன்றாக பழகுவது போல தோன்றும்.... உங்களுக்கு ஓரளவுக்கு பிரச்சனை முடிவுக்கு வருவது போல தோன்றும்... இருப்பதை வைத்து சந்தோஷமாக இருக்கலாமே என்று தோன்று... அடுத்தவர் நம்மை பற்றி சிறப்பாக பேசுகிறார் என்று தோன்றும்... அடுத்து வரக்கூடிய எதிர்காலம் மிக சிறப்பாக இருக்கப் போகிறது என்று தோன்றும்.... எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்க்கை சிறப்பாக எடுத்துச் செல்லலாம் என்று தோன்றும்... ஆனால் இவை எல்லாம் சாத்தியமாக வேண்டும் என்றால் மே மாதம் முடியும் வரை காத்திருங்கள்... காரணம் இரண்டாம் வீட்டிற்கு குரு பகவான் உச்ச ஸ்தானத்தில் வரும் பொழுது உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் ஆசைப்பட்டது அனைத்தையும் குருபகவான் நிறைவேற்றி கொடுப்பார்....
புதியதாக கடை வைக்க வேண்டுமா? திருமணமாக வேண்டுமா?? புத்திர பாக்கியத்திற்காக காத்திருக்கிறீர்களா? ? வீடு கட்ட வேண்டுமா நிலம் வாங்க வேண்டுமா? பிள்ளைகளுடைய எதிர்காலம் குறித்தான பயம் இருக்கிறதா? வேலையில் ஜொலிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? இவை அனைத்துமே குரு பகவான் ஜூன் மாதம் முதல் வாரத்தில் கடக ராசியில் பிரவேசிக்கும் போது செய்து கொடுப்பார்?
இந்த முதல் ஆறு மாதத்தில் நீங்கள் செய்ய வேண்டியது என்ன உங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வத்தை மனதார வழிபடுங்கள் அவங்க உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று இஷ்டப்படுகிறார்களோ அவற்றை செய்வார்கள்... அரச மரத்தடி விநாயகரை முடிந்தவரை எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ வழிபட்டு வாருங்கள்.... அன்பர்களே தடைகளை நீக்கக்கூடிய விநாயகர் உங்கள் உடனையே எப்பொழுதும் இருக்கட்டும் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் உங்களுக்கு சாதகமாக மாற்றி தருவார்....
இந்த வருடத்தை பொருத்தவரை உங்களுக்கு உழைப்பு பின்பு ஊதியம் என்ற அடிப்படையில்... நன்றாக வேலை செய்து வருடத்தின் அடுத்த ஆறு மாதத்தில் அதற்கான பலன்களை அனுபவிப்பீர்கள்... கையில் இருந்து வரவு முடிய செலவுகள் கொஞ்சம் அதிகமாக ஆகலாம்... குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம் நீண்ட தூர பிரயானங்களுக்கு வாய்ப்பு உண்டு.... எதற்கும் கோபப்படாமல் அமைதியாக வாழ்க்கையை நகர்த்துங்கள் எம்பெருமான் எப்பொழுதும் உங்களுடனே இருப்பார்....