Minister Udhayanithi: பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தினை வலியுறுத்தி மத்திய பிரதேசத்தினைச் சேர்ந்த மலையேறும் வீராங்கனை ஆஷா மால்வியா தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை சந்தித்தார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ”பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, 25 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள மத்திய பிரதேசத்தை சேர்ந்த மலையேறும் வீராங்கனை ஆஷா மால்வியா, தமிழ்நாடு வந்துள்ள நிலையில் இன்று என்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்” என குறிப்பிட்டுள்ளார்.