டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2, 2ஏ, 3, 4 ஆகிய தேர்வுகளுக்கு  கட்டணமின்றி  இலவசப்  பயிற்சி வகுப்புகளை டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் நடத்துகிறது. இதற்கு பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இவ்வாண்டு அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அரசின் அறிவிப்பு வரும் முன்னரே வெற்றி பெறுவதற்கான பயிற்சிகளை அறிந்து கொள்வதுதான் நமது நோக்கமாகும்.


 தகுதியான மாணவர்களுக்கு கட்டணம் எதுவுமில்லாமல் பயிற்சி அளிக்க டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் தயாராக உள்ளது. மாணவர்களின் கல்வித் தகுதியை முழுமையாக அறிந்து கொள்ள தமிழ்நாடு அரசின் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in என்ற பக்கத்தைப் பார்க்கவும்.


பயிற்சியின்போது தேர்வில் வெற்றி  பெற்ற முன்னாள் மாணவர்களும், அரசுத் துறைகளில் அனுபவம் பெற்றவர்களும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். இந்த வகுப்புகளை, டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும்  இணைந்து நடத்தி வருகிறது.


தலித்துகள், பழங்குடியின மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய, அனைத்து மாணவர்களும் பயன் பெறும் வகையில்  வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் கூறும்போது, ''எங்கள் பயிற்சி மையத்தில் கடந்த 12 ஆண்டுகளாக 1300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். களத்தில் நமக்கு கிடைத்த முன் அனுபவங்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகளை சிறப்பாக நடத்தி வருகின்றோம்.  


சனிக் கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரை  வகுப்புகள் வாரந்தோறும் நடக்கும். 01.04.2023 அன்று முதல் வகுப்புகள் தொடங்குகின்றன. மாணவர்கள் டிஎன்பிஎஸ்சியின் குரூப் தேர்வுகளில் முழுமையாக பங்கேற்றுத் தேர்வெழுதும் முழுத் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.


பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் முன்பதிவு செய்துவிட்டு வயது மற்றும் இருப்பிட ஆதாரத்தின் நகலுடன், ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் கொண்டு வர வேண்டும். மேலும் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். மாணவர்கள்  நம்பிக்கையோடும்  உறுதியாகவும் தேர்வை எதிர்கொண்டால் எளிதாக வெற்றியை பெறமுடியும்'' என்று வாசுதேவை தெரிவித்தார்.


பயிற்சி நடைபெறும் இடம்


டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம்,
சிஐடியு அலுவலகக் கட்டிடம், 2வது தளம், 
நெ. 6/9, கச்சாலீஷ்வரர் கோயில் அக்ரஹாரம், 
ஆர்மேனியன் தெரு, பாரிமுனை, 
சென்னை- 600001.


பயிற்சி பெற விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள்


செளந்தர்  90950 06640
அமலா        63698 74318.
ஜனனி        97906 10961
வாசுதேவன் 9444641712


மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன்- 9444641712