போக்குவரத்துத்துறை தொடர்பான மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் சிவசங்கர் பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அவை பின்வருமாறு;



  1. அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணிக்கும் பயணிகளுக்கு 50% சலுகை

  2. அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கென நான்கு இருக்கைகள் பிரத்யேகமாக ஒதுக்கப்படும்

  3. பேருந்து பணிமனைகளில் உணவகங்கள் நடத்த மகளிர் சுய உதவி குழுக்கள் முன் வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

  4. 18 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கனரக போக்குவரத்து வாகனங்களுக்கு தரச்சான்று வழங்க தானியங்கி சோதனை நிலையங்கள் அமைக்கப்படும்

  5. இணைய வழியில் பொதுமக்களுக்கு சேவைகள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஆதார் அட்டையை பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு தொடர்பான 42 சேவைகளை பொதுமக்கள் இணைய வழியில் பெறலாம்.

  6. சாலை விபத்தில் காயம் அடைந்த நபர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களுக்கு ( Good Samaritan) ரூ.5000 வழங்கப்படும்.

  7. ரூ.10 கோடியில் ஓட்டுநர் தேர்வு தளம் 20 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கணினி மயமாக்கப்பட்ட ஓட்டுநர் தேர்வு தளங்கள் அமைக்கப்படும்.

  8. சொந்த வாகனம் இல்லாதவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வு நடத்தும் பொருட்டு வட்டாரப் போக்குவரத்து/ பகுதி அலுவலகங்களுக்கு 145 இலகு ரக வாகனங்கள் வாங்கிட ரூ. 6.25 கோடி ஒதுக்கீடு.

  9. ரூ.87 லட்சத்தில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகாவில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்கப்படும்

  10. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.16.19 கோடியில் பணிமனைகள் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மற்றும் பாடியநல்லூர் பேருந்து நிலையம் மற்றும் பணிமனைகள் மேம்படுத்தப்படும்.

  11. பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் ரூ.3.55 கோடியில் புதிய பணிமனை அமைக்கப்படும்.