Electricity Bill: 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால நீட்டிப்பு - அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

Fengal Cyclone: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த கால நீட்டிப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

ஃபெஞ்சல் புயல் காரணமாக , பொதுமக்கள் சிரமத்தை குறைப்பதற்காக, மின்கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது. 

Continues below advertisement

4 மாவட்டங்கள்:

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசமானது, டிசம்பர் 10வரை நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். 

தொடர்மழை காரணமாக , அபராதமின்றி மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை 8.30 மணி வரையிலிருந்து மதியம் 1 மணி வரையிலான கால அளவில் பெய்த மழை அளவானது,சென்னையை பொறுத்தமட்டில்

எண்ணூர்- 13 செ.மீ

மீனம்பாக்கம் : 10.2 செ.மீ
கொளப்பாக்கம் : 10.25 செ.மீ
நுங்கம்பாக்கம் : 9.70 செ.மீ
நந்தனம் : 8.20 செ.மீ
பல இடங்களில் 7.0 செ.மீ க்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

வானிலை நிலவரம்:

30-11-2024: இன்றைய வானிலை

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர். அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


01-12-2024 நாளைய வானிலை:


விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Continues below advertisement