டாஸ்மாக் கடைகள், பார்கள், நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே  செயல்பட வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 


டாஸ்மாக் கடைகள் கூடுதல் நேரம் திறந்திருக்கிறதா என அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் டாஸ்மாக் கடைகளில் பதிவேடுகள் தினசரி முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், மதுபானங்களின் கூடுதல் விலைப் பட்டியலை டாஸ்மாக் கூடத்தின் முன்புறத்தில் வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத மதுக்கூடங்கள் செயல்படவில்லை என்பதை முதுநிலை மண்டல மேலாளர்கள் உறுதி செய்ய அமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.


தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள், ஆட்சியர்களுடன் மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பின் அமைச்சர் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், டாஸ்மாக் கடைகள், பார்கள் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்,  கடைகள் கூடுதல் நேரம் திறந்து இருக்கிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், டாஸ்மாக் கடைகளில் பதிவேடுகளை தினசரி முறையாகப் பராமரிக்க வேண்டும்.மதுபானங்களின் விற்பனை பட்டியலை டாஸ்மாக் கடையின் முன்புறத்தில் வைக்க வேண்டும்; நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மது பானங்களை விற்கக் கூடாது; கூடுதல் விலைக்கு மது வகைகள் விற்றால் அதற்கு உறிய அபராதத்தை வசூலிக்க வேண்டும்; சட்டவிரோத மதுக்கூடங்கள் செயல்படவில்லை என்பதை முதுநிலை மண்டல மேலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்; கள்ளச்சாராயம், போலி மது விற்கப்படுவதைக் கண்டறிந்து காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் அனைத்து விதிமுறைகளையும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக டாஸ்மாக் கடைகளில் எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இது தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க 


75 Rupee Coin: வருகிறது புதிய 75 ரூபாய் நாணயம்... மத்திய அரசு அறிவிப்பு... எப்படி இருக்கும் தெரியுமா?


ஆருத்ரா பணமோசடி வழக்கில் மேலும் 8 பேர் கைது; எல்என்எல் நிதி மோசடியில் 9 கோடி மீட்பு - பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள்