சட்டப்பேரவையில் அணில்களை குறிப்பிட்டு கலாய்த்த அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜூக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தெர்மாகோல் என்று குறிப்பிட்டு தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.


தமிழ்நாட்டில் மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக பலர் புகார் கூறிவருகின்றனர். திமுகவின் கடந்த ஆட்சியில் மின்வெட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால்கூட, அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருந்ததுகூட என்று கூறப்பட்டது. தற்போது மறுபடியும் திமுகவின் ஆட்சியில், மின்வெட்டு ஏற்பட்டு வருவது எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.


இந்த நிலையில், சட்டப்பேரவையில் மின்வெட்டு குறித்து பேசிய அதிமுக எம்எல்ஏ செல்லூராஜூ, அணில்கள் பற்றி கிண்டலாக பேசியது பேரவையில் சிரிப்பலை ஏற்படுத்தியது. தற்போது, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


அவரது பதிவில், ‘தமிழ்நாட்டில் மின் தடை இல்லை என தெரிந்து 'தடை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்கிறார் தெர்மோகோல் விஞ்ஞானி. 
எங்கள் பணியை நாங்கள் சிறப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். சித்திரை வெயிலில் வைகை நீர் ஆவியாகி விடாமல் தடுக்க உடனடியாக தெர்மோகோல் எடுத்துக்கொண்டு கிளம்புங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.



 


முன்னதாக, சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய செல்லூர் ராஜூ, “மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற்று வருவதால் மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அணில்கள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று பேசினார். அவரின் இந்த பேச்சால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சிரித்தனர். அப்போது, இதற்கு பதிலடி கொடுக்காமல் அமைச்சர் செந்தில் பாலாஜி இருந்தார்.


அதன்பிறகு, தனது பேஸ்புக் பக்கத்தில், செல்லூர் ராஜூவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி. தெர்மாகோல், அணில்கள் என இருவரும் மாறி மாறி விமர்சித்துக் கொண்டது சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண