அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு மூன்று அடைப்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், செந்தில் பாலாஜி ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் இருந்து, காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு மருத்துவ குழுவின் முழுமையான கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருக்கு விரைவில் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரின் நேற்றூ காலை 5 மணிக்கு அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. 5 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில், இதயத்துடிப்பு நிறுத்தப்படாமல் இதயத் தமனி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நான்கு பைபாஸ் இரத்தக்குழாய்கள் வைக்கப்பட்டு இதயத்தின் இரத்த ஓட்டம் மறுசீரமைக்கப்பட்டது.
அதன் பின் தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி 24 மணி நேர சிகிச்சையில் உள்ளார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய முதல் நாள் கண்காணிப்பில் உள்ளார் என மருத்துவர்கள் தகவல்.
இருதயத்தில் இருந்த மூன்று அடைப்புகள் காரணமாக கரோனரி தமணி அறுவை சிகிச்சை அமைச்சர் செந்தில் பலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட நிலையில் காவிரி மருத்துவமனையில் Advanced cardio care unit என்ற தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவ கண்காணிப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருந்து வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 24 மணி நேர வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை நிறைவு பெற்ற நிலையில் இருதயத்திற்கு 24 மணி நேரம் ஓய்வு தேவை என்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
24 மணி நேரத்திற்கு பின் ஆக்சிஜன் உதவியுடன் சுவாசிப்பார். அதன் பின் செயற்கை சுவாசம் முழுவதுமாக நீக்கப்பட்டு, இயக்கையாக சுவாசிக்க துவங்குவார். அதன் பின்னர் இதயம் படிப்படியாக தாமாகவே செயல்பட துவங்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதுவரை ரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவு இருதய துடிப்பின் அளவு தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும். 24 மணி நேரத்திற்கு பின் வெண்டிலேட்டர் அகற்றப்பட்டி, நீராகாரம் மூலம் அவருக்கு உணவு வழங்கப்பட உள்ளது. தற்போது இசிஜி பல்ஸ் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
அடைப்பு அகற்றபட்ட நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரத்த அழுத்தம் மற்றும் இருதயத்துடிப்பு இயல்பாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல், அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மயக்க மருந்து முற்றிலுமாக செயல் இழந்துவிட்டதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வலி நிவாரணி வழங்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.