மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 2023 ஜனவரி 31 ம் தேதிக்கு பிறகு மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க அவகாசம் வழங்கப்படாது. நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 30 வரை சுமார் 1.61 கோடி பேருக்கு மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, மின்சார இணைப்பு எண்ணுடன் இணைக்க ஜனவரி 31 ம் தேதி கால நீட்டிப்பு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஜனவரி 31ம் தேதி பிறகு மீண்டும் கால நீட்டிப்பு இருக்கும் என்று இருந்துவிடாமல் இந்த நாட்களை பயன்படுத்து மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணியை நிறைவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
தற்போது 2,811 பிரிவு அலுவலங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும், கூடுதலாக 2,811 சிறப்பு முகாம்கள் மூலம் அந்தந்த பகுதிக்கே நேரடியாக சென்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.