தமிழக அறநிலையத்துறை திட்டங்கள்
சென்னை மண்ணடி அருள்மிகு காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் திருக்கோயிலின் 5 நிலை இராஜகோபுரத்தினை உயர்த்தும் திருப்பணிகளை திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் ஜனவரி மாதத்திற்குள் 4,000 திருக்கோயில்களின் குடமுழுக்கு நிறைவு செய்து இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் ஒரு மிகப்பெரிய ஆன்மிக புரட்சியை அமைதியாக நடத்திக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் கோயில் தீபம் ஏற்றும் சர்ச்சை தொடர்பான கேள்விக்கு பதில அளித்த அமைச்சர் சேகர்பாபு, பாரதிய ஜனதா கட்சியினர் வட மாநிலங்களில் வேண்டுமென்றால் அவர்கள் நினைத்த மாதிரியான காரியங்கள். செயல்பாடுகள் ஈடேரலாம். ஆனால் இங்கு அவர்களின் கனவு பகல் கனவாக தான் இருக்கும். இது ராமானுஜர் வாழ்ந்த மண். ஆகவே மத ஒழுக்கம், மத ஒற்றுமை பேணி காக்கப்படும். இது போன்ற செயல்களை நிச்சயம் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அனைத்து மக்களும் சகோதரத்துவத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நண்பர் நயினார் நாகேந்திரனுக்கு தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.
பாஜகவின் பகல் கனவு நிறைவேறாது
சனாதானத்தை எவ்வளவு காலமானாலும் அழிக்க முடியாது என்று நயினார் நாகேந்திரன் அவர்கள் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், நாங்கள் எதையும் அழிக்க முயலவில்லை. எந்த ஒரு பொருளையும் மையப்படுத்தி மக்களை பிளவுபடுத்தக் கூடாது என்று தான் கூறுகிறோம். சமாதானம் என்பது மிக உயர்ந்த வார்த்தை. அனைத்து நிலையிலும் மக்களை சமமாக பார்ப்பது. ஆகவே இது சமாதானத்தை போற்றுகின்ற அரசு. சனாதனம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகின்றதால் அதை எதிர்க்கின்றது இந்த அரசு என கூறினார்.
பழங்காலத்தில் தரையில் பெல்டி அடிப்பது தரை பெல்டி என்றும், மேலே அடிப்பது மேல் பெல்டி என்றும் கூறுவார்கள். ஆனால் அதிமுகவினர் அடிக்கின்ற பெல்டி ஆகாய பெல்டியாகும். அந்த கட்சியின் பொதுச்செயலாளர் என்று சொல்பவர் முதலில் தனி நீதிபதியின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று கூறுகிறார். அவரை அடுத்து செய்தி தொடர்பாளராக இருக்கின்ற முன்னாள் அமைச்சர் அவர்களோ ஏற்கனவே நீதித்துறை என்ன கூறியதோ அதை கையாள வேண்டும் என்று சொல்கிறார்.
பாஜகவிடம் அடிமைப்பட்ட அதிமுக
அருமை அண்ணன் ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் நிகழ்வில் நயினார் நாகேந்திரன் அவர்கள் காவல்துறை நடவடிக்கைக்கு உட்பட்ட போது அவரை சந்தித்து ஆதரவு தெரிவிக்கின்றார். அதேபோல் உள்ளதை உள்ளபடி சொல்லுகின்ற வல்லமை பெற்ற உள்ளூர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ அவர்களின் நிலைப்பாடு ஒன்று. ஆகவே ஆளாளுக்கு ஒரு கோணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்ற அந்த இயக்கமானது கொள்கையை விட்டு முழுவதுமாக பாரதிய ஜனதா கட்சியிடம் அடிமைப்பட்டு விட்டது. ஊர் கூடி தேர் இழுத்தால் தான், வடம் ஒழுங்காக சென்றால் தான் நிலையை அடையும். இன்றைக்கு அதிமுகவின் நிலை அப்படியல்ல.
எச்.ராஜா அரசியல் சாபக்கேடு
ஆகவே அந்த தேர் 2026-ல் நிலையை அடையாது என்பதற்கு இதுபோன்ற நிகழ்வுகளை சான்றாகும். எச்.ராஜா அவர்களின் பேச்சையெல்லாம் ஒருபோதும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு நிலையில் பார்த்தால் நீதிபதிகளை தனக்கு தலை மேல் இருக்கின்ற பொருளை மையமாக வைத்து பேசுவார். சில நேரம் நீதிபதிகளை ஆதரித்து பேசுவார். அரசு அதிகாரிகளை காலணிக்கு ஒப்பிட்டு பேசுவார். இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த அரசியல்வாதி தமிழகத்தில் இருப்பது எங்களைப் போன்ற நேர்மையாக, நல்லொழுக்கத்தோடு அரசியல் செய்பவர்களுக்கு சாபக்கேடாத கருதுகிறோம்.
திருப்பரங்குன்றத்தில் ல் கடையடைப்பு போராட்டம் என்று அறிவித்தார்கள். இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மக்களே திரண்டு அந்தப் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். விரோதி பட்டியிலில் இடம்பெற்று கொண்டே இருக்கின்ற தமிழ்நாட்டிலே இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சி இனிமேலாவது விழித்துக் கொள்ள வேண்டும் என சேகர்பாபு தெரிவித்தார்.