• முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் தலைமையில் “தமிழ்நாடு வளர்கிறது" எனும் தலைப்பில் முதலிட்டாளர்கள் மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. அதில் மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக 36.660 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், 56,766 இளைஞர்களின் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கப்படுகிறது.
  • ஈரோட்டில் வரும் 16-ம் தேதி தவெக மாநாடு நடத்த அனுமதி கோரி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
  • பாமக தலைவர் அன்புமணி இல்லை என்பது டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கட்சியை தன்னிடமிருந்து அபகரிக்க நடந்த சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
  • சென்னையில் 6-வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
  • சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள ஜிஎஸ்டி ஆணையரக அலுவலகத்தில் பெரும் தீ விபத்து. 3 தீயணைப்பு வண்டிகளில் வந்துள்ள தீயணைப்புப் படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
  • சென்னையில் குடியிருப்பு, வணிக பயண்பாட்டிற்கு டேங்கர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் கட்டணத்தை 6 ஆண்டுகளுக்குப் பின் உயர்த்தியது சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனம்.
  • தஞ்சையில், தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் கொள்ளையடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது. அவர்களிடமிருந்து 87 சவரன் நகைகள் மீட்பு.
  • தென்காசி சங்கரன்கோவில் அருகே சொத்துத் தகராறில் மாற்றுத்திறனாளியான சங்கரலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், உறவினர்கள் 11 பேர் கைது.

 

Continues below advertisement

 

Continues below advertisement