தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மகள் காதல் திருமணம் செய்துள்ள நிலையில் அவரது தந்தையிடம் இருந்து பாதுகாப்புக் கோரி கர்நாடகா போலீசாரிடம் மனு அளித்தார். பின்னர் திருமணம் கோலத்தில் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.


அந்த வீடியோவில் ''வணக்கம். என் பெயர் ஜெயக்கல்யாணி. என் அப்பா பெயர் சேகர்பாபு. அவர் அறநிலையத்துறை அமைச்சராக உள்ளார். என் கணவர் பெயர் சதீஷ்.  நாங்கள் 6 வருடங்களாக காதலித்து வருகிறோம். நாங்கள்  வீட்டை விட்டு வெளியேறி  தற்போது திருமணம் செய்துகொண்டோம். நாங்கள்  இருவருமே மேஜர். நான் எம்பிபிஎஸ் முடித்திருக்கிறேன், என் கணவர் டிப்ளமோ முடித்துவிட்டு சொந்தமாக தொழில் செய்து வருகிறார். 


2021 ஆகஸ்ட்டில் நாங்கள்  வீட்டை விட்டு வெளியேறினோம். மூன்று நாள்களுக்கு பின்னர் எங்களை புனேவில் கண்டுபிடித்தனர்.  அங்கிருந்து அழைத்து வந்து திருவள்ளூரில் 2 மாதம் அவரை சட்டத்துக்கு புறம்பாக போலீஸ் உதவியுடன் அடைத்து வைத்தனர். கணவரின் பெற்றோர் மற்றும் நண்பர்களை போலீஸார் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர். எங்களிடம் ஆதாரம் உள்ளது. நாங்கள் இருவரும் மும்பையில் இருந்தபோது  எனது தந்தை இவருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்தார். இவர் மீது பொய்ப் புகார் அளித்து நிறைய வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அதற்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. நாங்கள் மூன்று நாள்களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம்" என்றார்.


நான் விருப்பத்துடனே இவருடன் வந்தேன். விருப்பத்தோடுதான் திருமணம் செய்துகொண்டோம். எங்கள் குடும்பத்தினர் எங்களையோ என் கணவர் குடும்பத்தையோ தொந்தரவு செய்யக் கூடாது. அதேபோல என் தந்தையும் என் கணவர் நண்பர்களையும், குடும்பத்தையும் தொந்தரவு செய்யக் கூடாது. நாங்கள் பாதுகாப்பு கோருகிறோம் என்றார்.